ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் பலி : விசாரணைக்கு உத்தரவு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பெங்களூரு :கர்நாடகாவின், சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில், ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி
ஆக்சிஜன் தட்டுப்பாடு,24 பேர் பலி ,ஓய்வு நீதிபதி விசாரணை

பெங்களூரு :கர்நாடகாவின், சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில், ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, 23 கொரோனா நோயாளிகள் உட்பட, 24 பேர் பலியாகினர்.


காங்., குற்றச்சாட்டு



இதில், மூன்று பேர் மட்டுமே ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் இதர மருத்துவ காரணங்களால் உயிரிழந்ததாகவும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.இந்த சம்பவத்தில் மொத்தம், 28 பேர் பலியானதாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவயோகி கலாசத்தை, மாநில அரசு
நியமித்தது.


அறிக்கை தாக்கல்



இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து, நீதி விசாரணை நடத்துமாறு, கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில், ஒரு நபர் கமிஷனை, மாநில உள்துறை அமைச்சகம் நேற்று நியமித்தது.இது குறித்து, உள்துறை கூடுதல் தலைமை செயலர் ரஜினீஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன், விசாரணை மேற்கொண்டு ஒரு மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர
விடப்பட்டுள்ளது.சாம்ராஜ் நகர் மற்றும் மைசூரு மாவட்ட துணை கமிஷனர்கள், இவ்விவகாரம் தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை, சுகாதாரத்துறை கமிஷனரிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆக்சிஜன் தட்டுப்பாடு5 பேர் உயிரிழப்பு!



உத்தரகண்ட் ஹரித்வார் மாவட்டத்தின் ரூர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று அதிகாலை, 30 நிமிடங்கள், 'ஆக்சிஜன் சப்ளை' தடைபட்டது. இதனால், ஒரு பெண் உட்பட, ஐந்து கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு அரசு டாக்டர்கள் தலைமையில், தனியார் மருத்துவமனையில் தணிக்கை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆக்சிஜன் செறிவூட்டிகள் வருகை!



தாய்லாந்து, சீனா, கத்தார், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து, 2,717 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 'இண்டிகோ' விமானம் வாயிலாக நேற்று எடுத்து வரப்பட்டன. இந்நிறுவனம், உள்நாட்டில் உள்ள, 36 விமான நிலையங்களில் இருந்து, பல்வேறு மாநிலங்களுக்கும், 1,425 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஏற்கனவே எடுத்துச் சென்று வினியோகித்துள்ளது. இந்த தகவலை, அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
06-மே-202119:12:26 IST Report Abuse
Marai Nayagan இப்போது கூட பெங்களுருவில் வேண்டும் என்றே ஒரு அரசு மருத்துவமனையை ஆக்கிரமித்து அடுத்தவருக்கு கிடைக்காமல் செய்து தங்கள் கேவலமான எண்ணத்தை செய்துள்ளனர் ஒரு கூட்டம்... உண்மையை கண்டறிந்து வெளியிட வேண்டும்.
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
06-மே-202119:11:54 IST Report Abuse
Marai Nayagan போதை பொருள் கடத்தல், தங்கம் கடத்தல்., ஹவாலா பணம், வரி ஏய்ப்பு என எல்லாவற்றிலும் ஈடுபடுவது ஒரு கூட்டம்... அவர்கள் நல்லவர்கள் போல கருது சொல்ல வருவான்.
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
06-மே-202111:59:07 IST Report Abuse
Bala சொந்த பெயரை போட வக்கில்லாத நீயெல்லாம் இங்க கருத்து போட வந்துட்டுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X