இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் நெதன்யாகு மீண்டும் தோல்வி

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜெருசலேம் : இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில், பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தோல்வி அடைந்தார்.மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டில், கடந்த மார்ச்சில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள, 120 தொகுதிகளில், நெதன்யாகுவின், லிக்யுட் கட்சி, 30 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான, 61 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், புதிய அரசு அமைக்க

ஜெருசலேம் : இஸ்ரேலில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில், பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தோல்வி அடைந்தார்.



latest tamil news



மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேல் நாட்டில், கடந்த மார்ச்சில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள, 120 தொகுதிகளில், நெதன்யாகுவின், லிக்யுட் கட்சி, 30 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான, 61 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், புதிய அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, நெதன்யாகு, 19 இடங்களை கைப்பற்றிய, யெஷ் அடிட் கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டார்.

மேலும், முன்னாள் ராணுவ அமைச்சர், நப்தாலி பென்னட் தலைமையிலான, யமினா கட்சியின், ஏழு எம்.பி.,க்கள் ஆதரவையும் கோரினார்.அத்துடன் மதவாத கட்சிகளின் ஆதரவை பெற்று, ஆட்சி அமைக்க திட்டமிட்டார்.இது தொடர்பாக, ஒரு மாதத்திற்கு மேலாக பேச்சு நடந்தது.'சுழற்சி முறையில், பிரதமர் பதவி வகிக்கலாம்' என, நெதன்யாகு இறங்கி வந்த போதிலும், கூட்டணி பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கிடையே, புதிய அரசு அமைக்க, நெதன்யாகுவிற்கு, இஸ்ரேல் ஜனாதிபதி, ரூவன் ரெவ்லின் அளித்த, 'கெடு' நேற்று முன்தினம் முடிவடைந்தது.


latest tamil news



இதைத் தொடர்ந்து, 'புதிய அரசு அமைக்க முடியவில்லை' என, நெதன்யாகு, ரூவன் ரெவ்லினிடம் தெரிவித்தார்.இதனால், இஸ்ரேலில், ஐந்தாவது முறையாக மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த, ரூவன் ரெவ்லின் உத்தரவிடுவாரா அல்லது இதர எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிப்பாரா என, தெரியவில்லை.கடந்த, இரு ஆண்டுகளில், இஸ்ரேலில், நான்கு முறை பொதுத் தேர்தல் நடைபெற்ற போதிலும், ஒன்றில் கூட, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
06-மே-202107:59:20 IST Report Abuse
Ramaraj P நட்பு நாடுகளில் இருக்கும் அனைத்து அதிபர்களும் மோடிக்கு நன்பர்களே
Rate this:
maharaja - திருநெல்வேலி,இந்தியா
06-மே-202115:47:20 IST Report Abuse
maharajaபெருமையை பீத்திக்கொள்...
Rate this:
Cancel
06-மே-202106:59:15 IST Report Abuse
ஆப்பு அவரே ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை யில் இருப்பவர். ட்ரம்ப் மாதிரி நம்ம தலைக்கு ஃப்ரண்ட். எப்பிடி தேறுவாரு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X