அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்!

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (79)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :நாகராஜன், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பு ஏற்கும் முன்பே, அக்கட்சியினர் சிலர் அராஜகத்தில் இறங்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. சமீபத்தில், 'அம்மா'

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
நாகராஜன், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பு ஏற்கும் முன்பே, அக்கட்சியினர் சிலர் அராஜகத்தில் இறங்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. சமீபத்தில், 'அம்மா' உணவகத்தின் பெயர் பலகையை உடைத்து, அவர்கள் ரகளை செய்துள்ளனர். அவர்கள் மீது, கட்சி மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.



latest tamil news



அரசு திட்டங்களுக்கு, ஆளுங்கட்சி தலைவர்களின் பெயரை சூட்டுவது, தவறான செயல். அரசு பணத்தில், கட்சியை வளர்க்க நினைக்கின்றனர். அ.தி.மு.க., தன் கட்சி பணத்திலிருந்து செலவிட்டு, உணவகம் நடத்தியிருந்தால், அதற்கு, 'அம்மா உணவகம்' என்ற பெயர் சூட்டி, அங்கு ஜெயலலிதா படத்தை வைக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதால், அக்கட்சியினர், அரசு நிதியில் விளம்பரம் செய்து கொண்டனர். தற்போது, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அதை, 'கலைஞர் உணவகம்' என, பெயர் மாற்றம் செய்ய உள்ளது. முந்தைய ஆட்சியில் நடந்த தவறை, மீண்டும் செய்வதற்காகவா, தி.மு.க.,வை மக்கள் தேர்ந்தெடுத்தனர்? தி.மு.க., நிதியில் இருந்து, மலிவு விலை உணவகம் துவக்கி, அதற்கு, கருணாநிதியின் பெயரைச் சூட்டி, கட்டடம் எங்கும் அவரின் படத்தை வைக்கலாம்; யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.


latest tamil news



ஆனால், அரசு பணத்தில், இப்படி பெயர் சூட்டிக் கொள்வது, தவறான செயல். ஆட்சி மாறினால், உணவகம் மீது தாக்குதல் நடக்கும்; பெயர் மீண்டும் மாறும்... இதெல்லாம் தேவையா? முன்னாள் முதல்வர்களை நினைவுப்படுத்துகிறோம் என்ற பெயரில், அவர்களை அசிங்கப்படுத்தாமல் இருக்க வேண்டும். நாடு, கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் இக்காலகட்டத்தில், தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி, அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது.எனவே, அரசு நிதியில் செயல்படும் உணவகத்திற்கு, 'அரசு உணவகம்' என்றே பெயர் சூட்ட வேண்டும். அ.தி.மு.க., அரசு செய்த தவறை, தி.மு.க., அரசும் தொடரக் கூடாது. மக்களின் வரிப்பணத்தை, இனிமேலாவது ஆளுங்கட்சி விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் மோசமான வழக்கம் மாற்றப்பட வேண்டும்

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
07-மே-202109:52:40 IST Report Abuse
தமிழ்வேள் திமுக ஆசாமிகளும் தங்களை ஈன்ற தாயை அம்மா என்றுதானே அழைப்பார்கள். இவனுக்கு பசிக்கும்போது பார்த்து சோறுபோட்டது இவனைப்பெற்ற அம்மா தானே தவிர கருணாநிதி அல்ல. உணவகத்துக்கு பசியாற்றுமிடத்துக்கு அம்மா என்ற பெயர் இருந்தால் என்ன தவறு? மேல்மருவத்தூர் அடிகளாரை கூட அவரது பக்தர்கள் அன்போடு அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். அம்மா என்ற பெயரை சொல்ல அழைப்பவர்கள் எல்லோரையும் இந்த திமுக ஆட்கள் தேடிவந்து அடிப்பார்களா என்ன ? மூளையை அடகுவைத்துவிட்ட கூட்டம் ..வேறு என்ன சொல்ல ?
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
07-மே-202107:40:32 IST Report Abuse
Ray தி.மு.க., நிதியில் இருந்து, மலிவு விலை உணவகம் துவக்கி, ?????? நல்லாயிருக்கே நாயம் அம்மா நிதியிலிருந்தா நடைபெறுகிறது??????????????
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
06-மே-202120:43:30 IST Report Abuse
R S BALA இதுக்கெல்லாம் சொல் புத்தி இருக்க கூடாது சொந்த புத்தி இருக்கனும்[முந்தைய ஆட்சியோ பிந்தைய ஆட்சியோ எதுவானாலும் சரி ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X