சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு இரட்டை ஆயுள்புதுக்கோட்டை: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் 30; அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகியாக இருந்தார். இவரது மனைவி தனியார் கல்லுாரி பேராசிரியை. இவரிடம் 2019ம் ஆண்டு அதே பகுதியைச்

தமிழக நிகழ்வுகள்
1. சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு இரட்டை ஆயுள்
புதுக்கோட்டை: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் 30; அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகியாக இருந்தார். இவரது மனைவி தனியார் கல்லுாரி பேராசிரியை. இவரிடம் 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி டியூசன் படித்துள்ளார்.சிறுமியிடம் சுரேஷ் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கர்ப்பமாக்கி உள்ளார். கர்ப்பத்தை மாத்திரை கொடுத்து கலைத்துள்ளார். 'போக்சோ' சட்டத்தில் சுரேஷ் கைதானார். வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு ஓர் ஆயுள் தண்டனையும் கர்ப்பத்தைக் கலைத்ததற்கு மற்றொரு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் 2.70 லட்சம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.latest tamil news2. காதல் திருமணம் செய்த வாலிபருக்கு வெட்டு
தொண்டாமுத்தூர் : காதல் திருமண ஜோடியை அரிவாளால் தாக்கிய உறவினர்கள், பெண்ணை இழுத்துச் சென்ற சம்பவம், தொண்டாமுத்துார் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்துள்ளது.

கோவை, குப்பனூரை சேர்ந்தவர் பகவதி குமார், 24. இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும், ஆறாண்டுகளாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர்; பெண்ணின் பெற்றோர் காதலை ஏற்கவில்லை. இந்நிலையில், இரு மாதம் முன் திருமணம் செய்து கொண்ட ஜோடி, குப்பனுாரில் வசித்தனர்.நேற்று திருமணத்தை பதிவு செய்வதற்காக, தொண்டாமுத்தூர் சார்பதிவகம் வந்த ஜோடியை, காத்திருந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கினர். அரிவாளால் வெட்ட முயற்சித்தபோது, தடுத்த பகவதி குமாரின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.


latest tamil newsஅவர் மீது மிளகாய்ப்பொடியை வீசினர்.அவர் நிலை குலைந்த வேளையில், பெண்ணை இழுத்துக்கொண்டு, உறவினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தன்னை தாக்கி, தன் மனைவியை இழுத்துச்சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி, பகவதி குமார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

3. தந்தைக்கு பெண்களுடன் தொடர்பு அடித்துக் கொன்ற மகன் கைது
செட்டிபாளையம் : ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த தொப்பம்பாளையம், மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, 65. மயிலேறிபாளையம் பிரிவிலுள்ள வக்கீல் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பொன்னுசாமி கழுத்து, முக தாடை பகுதிகளில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.செட்டிபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், பொன்னுசாமியின் மகன் சுரேஷ்குமார், 35 , மாலை, 6:00 மணியளவில் தோட்டத்திற்கு வந்து சென்றது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்தது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.


latest tamil news


Advertisement


இது குறித்து போலீசார் கூறுகையில், 'பொன்னுசாமிக்கு பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. மனைவி மாராத்தாளை கவனிக்கவில்லை. இதுகுறித்து சுரேஷ்குமார் தந்தையிடம் கேட்டும் பலனில்லை.நேற்று முன்தினம் வக்கீல் தோட்டத்திற்கு சென்ற சுரேஷ்குமார், தந்தையுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, அங்கு கிடந்த கட்டையை எடுத்து, தந்தையின் தாடை, கழுத்து பகுதிகளில் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பொன்னுசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்' என்றனர். தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

4. அம்மா மினி கிளினிக் சேதம்
நாகப்பட்டினம்: நாகை அருகே, அம்மா மினி கிளினிக் விளம்பர பலகைகளை சேதப்படுத்திய போதை வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம், அவுரிக்காட்டில், சமீபத்தில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, கிளினிக்கில் உதவியாளராக பணியாற்றும் சபரிநாதன், 24, பணியில் இருந்துஉள்ளார்.அப்போது, உப்பள தொழிலாளி சுதாகர் என்பவர், குடிபோதையில் வந்தார். கிளினிக் வாயிலில் இருந்த டிஜிட்டல் போர்டுகளை சேதப்படுத்தி, கிழித்து எறிந்துள்ளார். தடுக்க முயற்சித்த சபரிநாதனை தாக்க முயற்சித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சபரிநாதன் புகாரின்படி, வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்கு பதிந்து, சுதாகரை தேடி வருகின்றனர்.


latest tamil news5. இரட்டைக்கொலை எட்டு பேர் கைது
சூலுார் : சூலுாரில் இரட்டைக் கொலை தொடர்பாக, எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூலுார் அடுத்த பாரதிபுரம் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் ஆனந்தன், 47. இவரது மகன்கள் சரவணன், 24 மற்றும் சதீஷ்குமார், 22. இவரது குடும்பத்துக்கும், உறவினரான ராமநாதபுரத்தை சேர்ந்த வசந்த் குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.நேற்று முன்தினம், பாரதிபுரத்தில் இரு தரப்புக்கும் இடையில் நடந்த தகராறில், வசந்த் மற்றும் அவரது நண்பரான பள்ளபாளையத்தை சேர்ந்த மகேஷ்குமார், 38 ஆகிய இருவரும் அடித்து கொல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலுார் போலீசார், கொலை வழக்கில் தொடர்புடைய ஆனந்தன், ஹரி கிருஷ்ணன், பிரபு, அஸ்வின், ஸ்ரீ நாத் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.


latest tamil newsதலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தினேஷ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில், தகராறில் காயமடைந்து மருத்துவனையில் இருந்த சரவணன் மற்றும் தலைமறைவாக இருந்த தினேஷ் இருவரும் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்குப் பின் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதேபோல், சரவணனை கத்தியால் குத்திய வழக்கில், எதிர் தரப்பை சேர்ந்த பிரேம்,25 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவில் நிகழ்வுகள்:
தந்தை சிதையில் பாய்ந்த மகள்
பார்மர் : ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம், கோட்வாலி பகுதியில், மூன்று மகள்களின் தந்தையான தாமோதர்தாஸ் ஷர்தா, 73, கொரோனா பாதிப்பால், நேற்று முன்தினம் பலியானார். மயானத்தில், அவரது உடலை எரியூட்டியபோது, அருகில் நின்றிருந்த இளைய மகள் சந்திரா ஷர்தா, 34, திடீரென சிதைக்குள் பாய்ந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், 70 சதவீத தீக்காயங்களுடன் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-பாக்., வீரர்கள் நான்கு பேர் பலி
கராச்சி : ஆப்கானிஸ்தான் உடனான எல்லை அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவத்தைச் சேர்ந்த, நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில், எல்லையில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் தாக்கியதாக தெரிகிறது.

மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரானில், நடான்ஸ் என்ற இடத்தில், அணு உலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம், யுரேனியம் செறிவூட்டலுக்கான இயந்திரம் திடீரென சேதமடைந்தது.இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை இருளில் மூழ்கியது. ஒரு பிரிவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஈரான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.'இஸ்ரேலின் உளவுப் பிரிவான, 'மொஸாட்' டின்கணினி நாசகர வேலைதான், அணு உலை சேதத்திற்கு காரணம்' என, ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-மே-202104:31:07 IST Report Abuse
Cheran Perumal புதிய ஆட்சியில் இப்பகுதி புத்துயிர் பெற்று அதிக பக்கங்களை ஒதுக்க வேண்டி வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X