பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பணிக்கு வருதல், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடல் என, தமிழக அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, இரவு நேர ஊரங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை, தமிழக அரசு அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு
Corona Virus, TN fights Corona, Covid 19

சென்னை: அரசு ஊழியர்கள், 50 சதவீதம் பணிக்கு வருதல், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடல் என, தமிழக அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, இரவு நேர ஊரங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை, தமிழக அரசு அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அறிவித்த, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன; வரும், 20ம் தேதி வரை அமலில் இருக்கும்.


அவற்றின் விபரம்:


* பால், மருந்து கடைகள் இயங்க, எந்த தடையும் கிடையாது

* மளிகை, காய்கறிக் கடைகள், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் இயங்கும்


latest tamil news


* உணவகங்கள், பேக்கரிகள் அனைத்து நாட்களிலும், காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை; பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை; மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை செயல்படலாம்; பார்சல் வழங்க மட்டும் அனுமதி

* டீக்கடைகள், அனைத்து இறைச்சி, மீன், கோழிக்கறி கடைகள், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, பகல், 12:00 மணி வரை மட்டும் திறந்திருக்கும். டீக்கடைகளிலும் பார்சல் வழங்க மட்டும் அனுமதி. மற்ற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, அனைத்து நாட்களிலும், அனுமதி இல்லை

* திரையரங்குகள், கலாசார செயல்பாடுகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டு, திருவிழாக்கள் எதற்கும் அனுமதி கிடையாதுஅரசு அலுவலகங்கள்

* இன்று முதல், 20ம் தேதி வரை, அனைத்து அரசு அலுவலகங்களும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். அரசு ஊழியர்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என, சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். இதற்கான வருகைப் பதிவேடை, சூழ்நிலைக்கேற்ப, துறைத் தலைவர்கள், அரசு செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், தயார் செய்ய வேண்டும்

* அலுவலகம் வராத ஊழியர்கள், எப்போது அழைத்தாலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணியை, மாற்று வழியில் மேற்கொள்ள வேண்டும்

* 'ஏ' குரூப் அதிகாரிகள் அனைவரும், அனைத்து பணி நாட்களும், தவறாமல் பணிக்கு வர வேண்டும்.

* அலுவலகம் வராத ஊழியர்கள், முன் அனுமதியின்றி தலைமையிடத்தை விட்டு, வெளியில் செல்லக் கூடாது.

* அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
06-மே-202111:33:38 IST Report Abuse
Rajarajan (வடிவேல் பாணியில் படிக்கவும்) ஏய் மிஸ்டர், போன ஆட்சில கதவடைப்பு செஞ்சப்போ, வாழ்வாதாரம் பாதிக்கப்படுது சொல்லிட்டு, இப்போ நீங்க அதையே பண்றிங்களே ?? என்னாது இது ??? சின்னபுள்ள தனமா இருக்கு.
Rate this:
Cancel
Gamapathi - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
06-மே-202111:27:55 IST Report Abuse
Gamapathi நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினம் சாப்பிடுங்க & நோய் எதிப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பது எப்படி 🤪 Healthy Life depends on Healthy Cooking 🤪 More Details Healthy Immunity Booster Drink 😀 Please click 👉 s://www.youtube.com/watch?v=2xAGz5n32jo
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
06-மே-202111:25:54 IST Report Abuse
S.Baliah Seer "யாரோ பிழைக்க எருமை சினையான" கதை என்பார்கள்.எருமை சினையாவது அது குட்டிப்போட்டு தன் குட்டிகளுக்குப் பால் கொடுக்க. மனிதன் உண்டு கொழுக்க அல்ல.இந்தியா நூற்றுக்கு நூறு தனியார் மயம் ஆக மக்கள் எருமைப்பசு போல் ஏங்கி நிற்க வேண்டியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X