கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது துவங்கும்? ஐகோர்ட் கேள்வி

Updated : மே 08, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: 'துாத்துக்குடியில், ஆக்சிஜன் உற்பத்தியை, 'ஸ்டெர்லைட்' ஆலை எப் போது துவங்கும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில், 'ஆக்சிஜன், வென்டிலேட்டர்' மற்றும் தடுப்பூசி, 'ரெம்டெசிவிர்' இருப்பு குறித்த விபரங்களை அளிக்கும்படி, இரு அரசுகளுக்கும், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார்
High Court,sterlite, oxygen,ஐகோர்ட், ஆக்சிஜன்,ஸ்டெர்லைட்

சென்னை: 'துாத்துக்குடியில், ஆக்சிஜன் உற்பத்தியை, 'ஸ்டெர்லைட்' ஆலை எப் போது துவங்கும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில், 'ஆக்சிஜன், வென்டிலேட்டர்' மற்றும் தடுப்பூசி, 'ரெம்டெசிவிர்' இருப்பு குறித்த விபரங்களை அளிக்கும்படி, இரு அரசுகளுக்கும், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, 'தடுப்பூசி மருந்து மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.இதையடுத்து, தலைமை நீதிபதி, 'தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்குவதற்கான, குறித்த கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப, மாநில அரசுகளும் திட்டமிடும்; 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்த முடியும்' என்றார்.

வழக்கு, மீண்டும் முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் கே.எஸ்.சுரேஷ் ஆஜராகி, ஏற்கனவே கூடுதல் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ''தமிழகத்துக்கு, ஏப்., 21 முதல் மே 9 வரைக்கும், 1.35 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். பாதிப்புக்கு ஏற்ப, மாநிலங்களுக்கு மருந்து ஒதுக்கப்படுவதாகவும், இதில் பாகுபாடு இல்லை எனவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, 'ஆக்சிஜன் உற்பத்தியை, ஸ்டெர்லைட் ஆலை எப்போது துவங்கும்?' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதுகுறித்து, இன்று அறிக்கை அளிப்பதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, 'ஆக்சிஜன் தேவை இந்தியா முழுதும் உள்ளது; போதிய அளவுக்கு உற்பத்தி நடந்தால், மக்கள் பலனடைவர். மக்களை தேர்ந்தெடுத்து, வைரஸ் தாக்குவதில்லை. முதலில், இந்தப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும். மற்ற பிரச்னைகளை, அப்புறம் பார்க்கலாம்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் மருந்து இருப்பு; தடுப்பூசி விபரங்கள் ஆகியவற்றை அளிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. 'மனித உயிர்கள் மிகவும் முக்கியம்; அடித்தட்டு மக்களை நினைத்து பார்க்க வேண்டும்' என, தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

'ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ருமேனியா போன்ற சிறிய நாடுகளில் இருந்தும் உதவி கிடைக்கிறது. விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் வந்து இறங்கும் மருந்து மற்றும் உபகரணங்கள் தேங்கி கிடக்காமல், வினியோகிக்கப்பட வேண்டும்' எனவும், நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடக்க வேண்டியது இருந்தாலும், கொரோனா பாதிப்பு தொடர்பாக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை, சுகாதார துறை செயலரிடம் இருந்து பெற்று, அரசு வழக்கறிஞர் தெரிவிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
07-மே-202107:16:30 IST Report Abuse
RajanRajan ஒரு தொழிற்சாலையை மூடினாலும் அதனுடைய வழக்கமான கட்டமைப்பு இயந்திரங்கள் பராமரிப்பும் முடங்கி போனால் அதை சீரமைப்பது என்பது ஒரு அதிகப்படியான செலவு என்பதோடு காலவிரயம் சார்ந்த பணியாகும் மைலார்ட். எனவே வருங்காலத்தில் எந்த ஒரு தொழிற்சாலையை மூடினாலும் அதன் வழக்கமான இயந்திரங்களின் பராமரிப்பை ஒருபோதும் முடக்க கூடாது உற்பத்தியை மட்டும் அவசியமானால் நிறுத்தி வைக்கலாம். எப்படி வசதி??
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
06-மே-202118:46:21 IST Report Abuse
sankaseshan Hon. High Court should have asked this question directly to Stalin, earlier they were questioning EPS directly ,why not to present cm?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-மே-202116:16:24 IST Report Abuse
r.sundaram நீதிமன்றம், ஸ்டரிலிட் ஆலையில் ஆக்ஸிஜன் உர்பார்த்தி செய்யக்கூடாது என்றவர்களை ஒன்றும் சொல்ல வில்லை. என்னே வினோதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X