'ஸ்கெட்சை' மீறி ஜெயித்த அமைச்சர்கள்; ஸ்டாலின் ரகசிய விசாரணை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (58) | |
Advertisement
சென்னை: தன் திட்டத்தை மீறி, அ.தி.மு.க., அமைச்சர்கள் வெற்றி பெற்றது குறித்து, ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளார்.பழனிசாமி தலைமையிலான, நான்கு ஆண்டு கால ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலர், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சட்டசபையில், ஸ்டாலினை எள்ளி நகையாடினர். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்
DMK, MK Stalin, Stalin, ஸ்டாலின், திமுக

சென்னை: தன் திட்டத்தை மீறி, அ.தி.மு.க., அமைச்சர்கள் வெற்றி பெற்றது குறித்து, ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளார்.

பழனிசாமி தலைமையிலான, நான்கு ஆண்டு கால ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலர், தி.மு.க.,வையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தனர். சட்டசபையில், ஸ்டாலினை எள்ளி நகையாடினர். இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திணறினர்.

இவர்களுக்கு, தேர்தலில் பாடம் புகட்ட விரும்பிய ஸ்டாலின், அந்த மந்திரிகளுக்கு எதிராக, பலமான வேட்பாளர்களை நிறுத்த, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். மாவட்ட செயலர்கள் பரிந்துரைத்த பலருக்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சில தொகுதிகளில், தானே நேரடியாக தலையிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தினார். ஆனால், 11 அமைச்சர்கள் மட்டுமே, தோல்வி அடைந்துள்ளனர். தோற்கடிக்க வேண்டும் என, ஸ்டாலின், 'ஸ்கெட்ச்' போட்டு வைத்திருந்த, ஏழு அமைச்சர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலரின் ரகசிய ஆதரவு கிடைத்தது தான் வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.


latest tamil news


தேர்தல் நேரத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் பலரும், செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் நிலங்களையும், சொத்து பத்திரங்களையும் வாங்கி கொண்டு, அ.தி.மு.க.,வினர் சிலர் நிதியுதவி செய்துள்ளனர். இதற்கு பரிகாரமாக, அமைச்சர்கள் வெற்றி பெற, தி.மு.க.,வினர் உதவியுள்ளனர். தங்களின் அமைச்சர் பதவிக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்று நினைத்து, சில மூத்த நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்துள்ளனர். இதனால், அமைச்சர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம், ஸ்டாலினுக்கு எழுந்துள்ளது.

இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காக, ஸ்டாலின் ரகசிய விசாரணையை துவக்கியுள்ளதாக தெரிகிறது. அரசு பணிகளில் கவனம் செலுத்துவதால், அவரது மருமகனிடம், இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் வெற்றிக்கு உதவிய, தி.மு.க.,வினர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:55:00 IST Report Abuse
meenakshisundaram அப்போ 'ஆட்சி 'லே கவனம் கொடுக்கலையா ?இந்த வேலையை ராசா .கனி இல்லேன்னா உதயநிதி கிட்டே விட்டு விட லாமே -அவிங்க இன்னும் நல்லா செய்வார்களே
Rate this:
Cancel
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
06-மே-202115:29:00 IST Report Abuse
selvaraju தேர்தல் நேரத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் பலரும், செலவிற்கு பணம் இல்லாமல் திண்டாடியுள்ளனர். அந்த நேரத்தில் நிலங்களையும், சொத்து பத்திரங்களையும் வாங்கி கொண்டு, அ.தி.மு.க.,வினர் சிலர் நிதியுதவி செய்துள்ளனர். இதற்கு பரிகாரமாக, அமைச்சர்கள் வெற்றி பெற, தி.மு.க.,வினர் உதவியுள்ளனர்.
Rate this:
Cancel
B.KESAVAN - chennai,இந்தியா
06-மே-202114:52:16 IST Report Abuse
B.KESAVAN திரு பழனிச்சாமி அவர்களின் பதவிக்காலம் நெருப்பு ஆற்றில் நீந்தி வந்ததற்கு சமம், அதை வெற்றிகரமாக செயற்படுத்தினார்,அவருடைய செயல்களில் தன் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல்,திரைத்துறையினரின் அவசியமற்ற மேடையை அலங்கரிக்காததும்,அரசு நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனையின் வழிகாட்டுதலில் இயற்க்கை பேரழிவுகளை, கரூணா தொற்று, கையாண்டவிதம் பாராட்டுதலுக்குரியது. மின்சாரத்துறை மின் வெட்டு குறைத்த துறையாக, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சட்டஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் நன்றாகவே செயல்பட்டன. அவசியமற்ற செலவுகள் செய்யாமல் இலவசங்களை ஊக்குவித்துவிட்டார் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைப்பதற்கு என்று நினைக்க தோன்றுகிறது. மதுக்கடைகளை மூடுவதைக் காட்டிலும் மது தொழிற்சாலைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானதாக மாற்றியிருந்தாலே மெல்ல மெல்ல மது உற்பத்திக்குறைப்பு, விற்பனைக்குறைப்பு,மதுக்கடைக்குறைப்பு நடத்தி, வரலாற்றில் இடம்பிடித்திருக்கலாம்.இனியும் நல்ல எதிர்காலம் உள்ள தற்போதைய தலைவர் திரு எடப்பாடியார். எதிர்க்கட்சி தலைவராக ஆளும் அரசு அதிகாரத்தின் தவறுகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் அதையும் திறம்பட செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.திரு பழனிச்சாமி தேசிய நீரோட்டத்தில் இணைந்து மக்களின் நன்மைக்கு தொலைநோக்கு திட்டங்களை ஆதரித்து அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X