தனியார் மருத்துவமனைகளுக்கு 'கிடுக்கிப்பிடி'; ஜெகன் அரசு முன்னுதாரணம்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ஐதராபாத்: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாத ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகள், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், கொரோனா சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணங்கள்
JaganMohanReddy, AndhraPradesh, PrivateHospital, CovidTreatment, Price, ஆந்திரா, முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி, தனியார் மருத்துவமனை, கொரோனா, சிகிச்சை, கட்டணம்

ஐதராபாத்: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாத ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகள், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், கொரோனா சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணங்கள் வசூலித்து வருகின்றன. அரசு கட்டணங்களை வகுத்தாலும் அது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. அரசு நிர்ணயித்த தொகையை விட, பல மடங்கு கட்டணம் வசூலித்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பல அதிரடி நடவடிக்கைகளை, தைரியமாக எடுத்து அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.


latest tamil news


ஆந்திராவில், அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அரசு காப்பீட்டு திட்டமான 'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டம் மூலம், பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அதே சமயம், ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, ஜெகன் அரசு குறைந்த கட்டணம் (ரூ.5,000 - ரூ.11000) நிர்ணயித்திருக்கிறது.

வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதனை செயல்படுத்தவும் நடவடிக்கைகளை ஜெகன் அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன், தனியார் மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். கொரோனா காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அந்த மருத்துவமனையை மூடிவிட்டு, அரசே அதனை ஏற்று நடத்தும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1902 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்ததுடன், அதனை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
07-மே-202107:43:59 IST Report Abuse
Ray திருப்பதி லட்டு குறைந்த பட்சம் கடந்த 2000 ஆம் ஆண்டு தரத்துக்காவது கொண்டுவாருங்கள் வாங்கும் நெய்யெல்லாம் எங்கே போகிறது????????
Rate this:
Cancel
06-மே-202120:30:20 IST Report Abuse
Jesuswithus Panagudi விரைவில் தாங்கள் இந்தியாவுக்கு பிரதமராகி மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-மே-202114:45:09 IST Report Abuse
Vena Suna அருமை..இவன் நல்லவன் இல்லை என்றாலும் இது பாராட்ட வேண்டியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X