அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு ஒரே மாதிரியான கட்டணம்; ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை

Added : மே 06, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை: 'புதிதாக அமையவுள்ள, ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொரோனா சிகிச்சை கட்டணங்களை நெறிப்படுத்தி, ஒரே மாதிரியான கட்டணத்தை அறிவிக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அறிக்கை:கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி, சில தனியார் மருத்துவமனைகள், ஈவு
CovidTreatment, Cost, KamalHaasan, MNM, Kamal, DMK, Stalin, திமுக, ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம், மநீம, கொரோனா, சிகிச்சை, கட்டணம், கமல், கமல்ஹாசன்

சென்னை: 'புதிதாக அமையவுள்ள, ஸ்டாலின் தலைமையிலான அரசு, கொரோனா சிகிச்சை கட்டணங்களை நெறிப்படுத்தி, ஒரே மாதிரியான கட்டணத்தை அறிவிக்க வேண்டும்' என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அறிக்கை:கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி, சில தனியார் மருத்துவமனைகள், ஈவு இரக்கமின்றி நடக்கின்றன.நுரையீரல் தொற்று எந்தளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, 'சிடி ஸ்கேன்' எடுக்க, 1,500 முதல், 8,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.


latest tamil news


ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைக்கு, 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அமையவுள்ள புதிய அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அனைத்து தனியார் மருத்துவமனைகளின் கட்டணத்தை, ஒரே மாதிரியாக, அரசே நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202106:50:33 IST Report Abuse
மனுநீதி B team சொல்லுது A team செய்யுமா?!
Rate this:
Cancel
07-மே-202106:32:38 IST Report Abuse
ravi chandran பெரிய விஞ்ஞான டுபாக்கூர்
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
06-மே-202117:41:37 IST Report Abuse
Karthik கமல் சார். யாரிடம் கேட்டிருக்கிறீர்கள்? இதெல்லாம் நடக்கிற விஷயமா? அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க இல்லை. இருவரும் ஒன்றுதான். ஓட்டுப்போட பணம் கொடுக்காதீர்கள் என்றும்தான் சொன்னீர்கள், நடந்ததா என்ன? ஓட்டுப்போட பணம் கொடுப்பவர்களை ஓநாய்கள் என்று சொன்னீர்கள். அவற்றுள் இவரும் அடங்குவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X