பொது செய்தி

தமிழ்நாடு

"உங்களுடன் கூட்டணி அமைத்த சரத்குமாரின் கட்சியை சாடுகிறீர்களா..."

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தான், எங்கள் கட்சியின் தோல்விக்கு காரணம். மேலும், எங்கள் தலைவர் கமல், அதிக இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யாததும் ஒரு காரணம்.- ம.நீ.ம கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ்'உங்களுடன் கூட்டணி அமைத்த, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சாடுகிறீர்களா...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், நடிகர் கமல்ஹாசனின்
பேச்சு_பேட்டி_அறிக்கை, மநீம, பொன்ராஜ்

மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தான், எங்கள் கட்சியின் தோல்விக்கு காரணம். மேலும், எங்கள் தலைவர் கமல், அதிக இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யாததும் ஒரு காரணம்.
- ம.நீ.ம கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ்


'உங்களுடன் கூட்டணி அமைத்த, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சாடுகிறீர்களா...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் பேட்டி



இந்த தேர்தலில், 18 இடங்களில் நாங்கள் வென்றுள்ளோம். 2026ல், 36; 2031ல், 72; 2036ல், 144 இடங்களில் வெற்றி பெறுவோம். நீங்கள் நம்புகிறீர்களா?
- விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர்


'அப்போ இன்னும், மூன்று தேர்தல்களில், காங்கிரஸ் தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போகிறதா; தி.மு.க., என்னவாகும் என சொல்லவில்லையே...' என, நெத்தடியடியாக கேட்கத் தோன்றும் வகையில், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் அறிக்கை



தேர்தல் முடிவு வந்த பிறகு, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் ஐந்து பேர், படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கம்யூ.,க்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக ஊடகவியலாளர்களின் ரியாக் ஷன் என்ன?
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'வன்முறை, அரசியல் படுகொலைகள் எங்கு நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க., தலைவரும் விரைவில் கண்டிப்பார் என எதிர்பார்ப்போம்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை



latest tamil news


கேரளாவில் வரலாற்றுச் சாதனை வெற்றி பெற்றுள்ள முதல்வர் பினராயி விஜயன், என் வாழ்த்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை காப்பாற்ற, நாம் இணைந்து பணியாற்றுவோம். நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ, ஈ.வெ.ரா., மண் வாழ்த்துகிறது.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


'அவர் மண், இவர் மண் என, உங்களை நீங்களே ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள்; இது தமிழக மண், இந்திய மண் என சொல்லுங்களேன்...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை



கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், ஜெ., கட்டிக்காத்த, அ.தி.மு.க., கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ஏழை, எளிய சாமானிய மக்களுக்காக உழைத்த தொண்டர்களின் மாபெரும் இயக்கமான, அ.தி.மு.க., தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும்.
- தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணி


'மூன்று மாவட்டங்கள், அ.தி.மு.க., கோட்டையாக இருப்பதில் என்ன பயன்; பிற மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி, 'கோட்டை'யில் ஓட்டை போட்டு விட்டதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் வேலுமணி அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
11-மே-202123:26:36 IST Report Abuse
M  Ramachandran ஓசி சோறு தினமும் உளேன் ஐயா என்று பத்திரிக்கை செய்திகள் வாயிலாக ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தி கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
06-மே-202117:52:55 IST Report Abuse
vbs manian ஒரு மண்ணும் இல்லை. மண்ணாங்கட்டிதான்.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
06-மே-202116:29:11 IST Report Abuse
Narasimhan லெட்டர் பேட் கட்சி காரர்கள் ஏன் கூவுறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X