பொது செய்தி

இந்தியா

நூறு ஆண்டுகள் கழித்து திரும்புகிறது வரலாறு!

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இதேபோன்று நுாறு ஆண்டுகளுக்கு முன், 1918ல் ஒரு கொடிய வைரஸ் தொற்று, உலகையே புரட்டிப்போட்டது; 5 கோடி பேரை காவு வாங்கியது. முதலாம் உலகப்போர் முடிவடைந்த 1918ம் ஆண்டில் உலகம் முழுவதும் திடீரென பரவத்தொடங்கிய இந்த வைரஸ் 'ஸ்பானிஷ் ப்ளூ' என்றழைக்கப்பட்டது. உலகப்போரின் போது தணிக்கை

புதுடில்லி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இதேபோன்று நுாறு ஆண்டுகளுக்கு முன், 1918ல் ஒரு கொடிய வைரஸ் தொற்று, உலகையே புரட்டிப்போட்டது; 5 கோடி பேரை காவு வாங்கியது.



latest tamil news


முதலாம் உலகப்போர் முடிவடைந்த 1918ம் ஆண்டில் உலகம் முழுவதும் திடீரென பரவத்தொடங்கிய இந்த வைரஸ் 'ஸ்பானிஷ் ப்ளூ' என்றழைக்கப்பட்டது. உலகப்போரின் போது தணிக்கை செய்யப்படாத ஸ்பெயின் பத்திரிகைகள், போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும் பரவிய இந்த நோயை பற்றிய விவரங்களை வெளியிட்டதால், 'ஸ்பானிஷ் ப்ளூ' என பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும், இந்த வைரஸ் எங்கிருந்து, எப்போது பரவத்தொடங்கியது என இப்போது வரை கண்டறியப்படவில்லை.


latest tamil news


ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவும் இந்த வைரசிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. முதன்முறையாக மும்பை நகரில் இந்நோய் பரவியது. நாளடைவில் அதிவேகமாக பரவிய இந்த தொற்றால், இந்தியாவில் மட்டும் 1.8 கோடி மக்கள் (அப்போதைய மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர்) உயிரிழந்தனர்.
இது முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் கப்பல் மூலம் பம்பாய் வந்தடைந்த போது அவர்கள் மூலமாக தான் இந்தியாவில் இந்த தொற்று பரவியதாக கருதப்படுகிறது.


latest tamil news


இந்த காய்ச்சலில் காந்தி மற்றும் அவரது ஆசிரமத்த்தில் இருந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அப்போது, 'வாழ்வின் மீதமிருந்த ஆர்வம் போய்விட்டது' என, காந்தி அவரது நண்பரிடம் கூறினார். ஆனால், சில நாள் பாதிப்பிற்கு பின்னர் காந்தி குணமடைந்தார். செய்தித்தாள்களில், 'காய்ச்சல் வராமல் இருக்க, மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். விழாக்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்' உள்ளிட்ட அறிவுறைகள் வெளியிடப்பட்டன.

'காய்ச்சல், கை, கால் எலும்புகளில் வலி, மூச்சுக்குழாய் வீக்கம், கண் வலி' போன்றவைகளும் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாக கூறப்பட்டது. பாதிப்பு நேரத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என, செய்தித்தாள்கள் விமர்சித்தன. பின்னர், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் சார்பில் தற்காலிக மருத்துவமனைகள், மருந்துகள் விநியோகிக்க சிறு மையங்கள், முகாம்கள் அமைத்து பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர். இதனால், ஸ்பானிஷ் ப்ளூ பாதிப்பில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டது.


latest tamil news


அப்போதைய காலக்கட்டத்தை ஒப்பிடும் போது தற்போது மருத்துவத்தில் பல மடங்கு முன்னேறி இருந்தாலும், கொரோனா வைரசிடமிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பதுடன், சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
12-மே-202122:00:10 IST Report Abuse
bal விஞ்ஞானம் வளர்ச்சி ஒரு பிரயோசனமுமில்லை...அப்போது என்ன நிகழ்ந்ததோ அதே இப்போது நடக்கிறது...என்ன இப்போது ஊழல் இன்னும் அதிகம்...கொள்ளை இன்னும் அதிகம் இந்த வியாதி பேர் சொல்லி.
Rate this:
Cancel
06-மே-202119:15:30 IST Report Abuse
ஆப்பு நூறு வருஷத்துக்கு ஒருமுறை ஒரு அவதார புருஷர் வருவாரு.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
06-மே-202117:06:58 IST Report Abuse
sridhar அப்போது ஓமியோபதி பெரும் பங்கு ஆற்றியது. இப்போதும் ஆர்சனிக் மற்றும் கேம்போரா மருந்துகள் நல்ல பலன் தருவதாக செய்தி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X