சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை முன் தவம் கிடக்கும் ஆம்புலன்ஸ்கள்!

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பிய நிலையில், மருத்துவமனை வாசல்களில் நோயாளிகளுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாமதமாக சிகிச்சை கிடைப்பதால், பலர் உயிரிழக்க நேரிடுகிறது.தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் தீவிரமாக உள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 21 ஆயிரத்தை தாண்டி
Covid Crisis, Tamilnadu, Ambulance, Hospital, கொரோனா, ஆம்புலன்ஸ், சென்னை, மருத்துவமனை

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பிய நிலையில், மருத்துவமனை வாசல்களில் நோயாளிகளுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாமதமாக சிகிச்சை கிடைப்பதால், பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குதல் தீவிரமாக உள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 21 ஆயிரத்தை தாண்டி விட்டது.மொத்தம், 1.10 லட்சத்துக்கும் மேலானோர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 60 சதவீதம் பேர் வீட்டு தனிமையிலும், கொரோனா கவனிப்பு சிகிச்சை மையங்களிலும் உள்ளனர். மீதமுள்ள, 40 சதவீதம் பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.இதில், 5 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு, 'வெண்டிலேட்டர்' உடன் தீவிர சிகிச்சையும், 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஆக்சிஜன் சிகிச்சையும் தேவைப்படுகிறது.


latest tamil newsஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்காக, 63 ஆயிரத்து, 317 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருப்பதாகவும், அரசு தரப்பில் கூறப்படுகிறது.ஆனால், மாநிலம் முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை எனக்கூறி, நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.


latest tamil newsஇதற்கிடையே, கொரோனா சிகிச்சைக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நாள்தோறும் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள், இரண்டு நாட்கள் வரை காத்துக் கிடக்கின்றன. இந்த வாகனங்கள் வரும் ஒலி, அவ்வழியே செல்வோரை கலங்க வைக்கின்றன.அவ்வாறு வாகனங்களில் வரும் நோயாளிகளுக்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்ள ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

தனிப்பட்ட வாகனங்களில் வருவோருக்கு, அந்த வசதி இல்லாததால், சில நேரங்களில் துரதிருஷ்டவசமாக உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.இதனால், கொரோனா தொற்றால் தினசரி, 150க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இவற்றை தடுக்க, தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
06-மே-202119:08:23 IST Report Abuse
S Bala யார் என்ன சொன்னாலும் எவனும் மாஸ்க் போடுவதில்லை இடைவெளி விடுவதில்லை கைகளை கழுவுவதில்லை தடுப்பூசி போடுவதில்லை ஐநூறு ரூபாயும் ஒரு பாட்டிலும் கிடைத்தால் அரசியல் கட்சி கூட்டத்துக்கு போய் உட்காருவார்கள். ஆனால் இவர்களுக்கு என்ன தொற்று வந்து அதை மற்றவர்களுக்கு பரப்பினாலும் உடனே அரசை குறை சொல்வார்கள். நேற்று வரை குறை பேசியவர்கள் நாளை முதல் என்ன பேசுவார்கள் என்று பார்க்கலாம். எதிலும் எப்போதும் அரசியல், மதம், சினிமா, சாராயம். திராவிடன்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:26:08 IST Report Abuse
தல புராணம்முந்தின தின செய்தி. பீஜேபிகள் ஆட்சஜி நடக்கும் குஜராத்தில் அஹமதாபாத் அருகில் 50,000 பேர் (பெரும்பான்மை பெண்கள்), அந்த ஊரு அம்மனுக்கு அபிஷேகம் பண்ண கும்பலா கும்மியடிச்சிருக்காங்க.. காவல்துறையும், நிர்வாகமும் தூங்கிக்கிட்டு இருந்திருக்கு.. பத்து மேணிநேரம் ஊர்வலம் கொண்டாட்டம், குடமுழுக்குன்னு ஒரு தடையுமில்லாமல் கும்மி.. அதிர்ந்து போன சமூக ஆர்வலர்கள் சமூகவலைத்தளங்களில் கழுவி ஊற்றினார்கள்.. போலீசும், இது எங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று எல்லாம் கொரோனாவை பரப்பிவிட்ட பிறகு வந்து கூட்டத்தை கலைத்தார்களாம்.....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-மே-202117:13:16 IST Report Abuse
g.s,rajan மனித உயிருக்கு மதிப்பே இல்லை ஆனால் இந்தியாவில் மனிதனுக்கு மதிப்பே இல்லை . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202115:13:44 IST Report Abuse
தமிழவேல் மருத்துவ வசதியுடன் மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் என்னவாகின ?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:21:33 IST Report Abuse
தல புராணம்அது போட்டோவில தான்.. நீங்களே அதை உண்மைன்னு நினைச்சிக்கிட்டா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது .. போட்டோவுக்கு கீழே சின்ன எழுத்திலே போட்டிருந்ததை நீங்க கவனிக்கல்லியா ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X