பொது செய்தி

இந்தியா

கொரோனா எதிரொலி: நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 151ஏன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள், அந்த பதவிக்கான ஆயுள் ஒரு

புதுடில்லி: பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.



latest tamil news



இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 151ஏன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள், அந்த பதவிக்கான ஆயுள் ஒரு வருடமோ அதற்கு மேற்பட்டோ இருந்தால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


latest tamil news



தாத்ரா & நாகர் ஹவேலி, 28-கந்த்வா (மத்தியப் பிரதேசம்) மற்றும் 2-மண்டி (இமாச்சலப் பிரதேசம்) ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளும்; 01-கல்கா மற்றும் 46-எல்லென்பாத் (ஹரியானா), 155-வல்லப்நகர் (ராஜஸ்தான்), 33-சிண்ட்கி (கர்நாடகா), 47-ராஜபால மற்றும் 13-மாவ்ரிங்க்னெங்க் (எஸ்.டி) (மேகாலாயா), 08-ஃபதேப்பூர் (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் 124-பட்வேல் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும் காலியாக உள்ளன. இன்னும் சில இடங்களும் காலியாக உள்ள நிலையில், அவை தொடர்பான அறிக்கைகள், அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறோம்.


latest tamil news



கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால், தற்போது இடைத்தேர்தல்கள் நடத்துவது சரியாக இருக்காது. நிலைமை குறிப்பிடத்தகுந்த அளவு சீரடைந்த பின்னர் இந்த இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுத்துள்ளோம்.தொடர்புடைய மாநிலங்களிடம் இருந்து கருத்துகளை பெற்ற பின்னரும், பெருந்தொற்று சூழ்நிலையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை மூலம் ஆய்வு செய்த பிறகும் இடைத்தேர்தல்கள் குறித்த முடிவை சரியான நேரத்தில் ஆணையம் எடுக்கும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202117:46:57 IST Report Abuse
Thiagarajan V பொதுத் தேர்தல்கள் 5 மாநிலங்களில் நடந்ததே அப்ப நல்லா இருக்கி பேசாம இருந்தீங்க. கொலகாரப் பாவிகளா ?!
Rate this:
Cancel
செந்தமிழ் அரசு இடைத் தேர்தலை நடத்தினால், ஆளும் பாஜகவின் முகத்திரை மீண்டும் கிழியும் என்ற பயம்.
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
06-மே-202115:42:23 IST Report Abuse
Raj இபபோது கூட இது கொரோனாவுக்காக எடுக்கபட்ட நடவடிக்கை இல்லை, கொரோனா போரை சொல்லி மம்தாவை பழிவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X