அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன்; அழகிரி வாழ்த்து

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (108)
Share
Advertisement
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக 133 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாளை (மே 7) காலை 9 மணியளவில் திமுக தலைவர்
DMK, Stalin, Azhagiri, அழகிரி, ஸ்டாலின், திமுக, வாழ்த்து

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் அவரது அண்ணன் அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் திமுக 133 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாளை (மே 7) காலை 9 மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ஸ்டாலின் மற்றும் அவரது அண்ணன் அழகிரி இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வந்தது.


latest tamil news



இந்நிலையில், ஸ்டாலின் வெற்றிப்பெற்றதற்கு அழகிரி தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அழகிரி கூறுகையில், ‛தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்,' எனக் கூறியுள்ளார். இதன்மூலம் திமுக.,வில் அண்ணன், தம்பி இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்ததாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:35:31 IST Report Abuse
meenakshisundaram அஞ்சா நெஞ்சமும் அஞ்சும் நெஞ்சமும் கூடிட்டாங்க ?.மக்களுக்கு இனிமே பொற்காலம் தான் ஏதோ செட்டில்மென்ட் ஆக வாய்ப்புள்ளது .
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
08-மே-202111:06:24 IST Report Abuse
திராவிஷ கிருமி 'ஆயிரம் கோடிகள்' தான் இருந்தாலும்... கட்டுமரக்குடும்பம்... ரொம்ப கட்டுக்கோப்பான குடும்பம்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-மே-202111:41:16 IST Report Abuse
RajanRajan உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செய்யலை பார்த்து....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X