இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம்: அமெரிக்கா உச்ச கட்ட எச்சரிக்கை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: 'இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம்' என, அமெரிக்க அரசு உச்ச கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவை கொரோனா 2வது அலை உலுக்கி எடுத்துவருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்: 'இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம்' என, அமெரிக்க அரசு உச்ச கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவை கொரோனா 2வது அலை உலுக்கி எடுத்துவருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், ஐ.சி.யு., வசதி கிடைக்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் திண்டாடுகிறார்கள்.



latest tamil news



இந்நிலையில் 'இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம்' என, லெவல்-4 எச்சரிக்கையை அமெரிக்க அரசு விடுத்துள்ளது. லெவல்-4 எச்சரிக்கை என்பது அமெரிக்க மக்கள் பயணம் குறித்த உச்ச கட்ட எச்சரிக்கையாகும்.
அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 'இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால், அமெரிக்க மக்கள் யாரும் இந்தியாவுக்கு பயணிக்க வேண்டாம். இந்தியாவிலிருந்து வெளியேற நினைக்கும் அமெரிக்க மக்கள் உடனடியாக வெளியேறுங்கள்' என, எச்சரித்துள்ளது.


latest tamil news



கடந்த மாதம் 28ம் தேதி அமெரிக்க அரசு வெளியிட்ட எச்சரிக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போது அவர்கள் குடும்பத்துடன் வெளியேற வாய்ப்பளித்தது. அமெரிக்க அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'இந்தியாவில் பணியாற்றமும் அவசரகால அமெரிக்க அரசு ஊழியர்களும் இந்தியாவிலிருந்து வெளியேறலாம்' எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:41:45 IST Report Abuse
தல புராணம் ஒரே நாடு பூரா சுடுகாடு.. சங்கிக எல்லாரும் விறகுகட்டையை வாங்கி, மோடி செயலியில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. உங்களுடைய கல்கி புருஷர் வந்துட்டார்..
Rate this:
Cancel
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
06-மே-202116:27:40 IST Report Abuse
Radhakrishnan எங்க நாட்டுக்கு யாரும் வராதீங்கப்பா. கொரோன பய இன்னும் ஒரு அஞ்சு வருடம் இங்கதான் சுத்திட்டு இருப்பான்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மே-202113:49:55 IST Report Abuse
தமிழவேல் அவர்களது மக்களை அவர்கள் காப்பாற்றத் தேவையான ஏற்பாடுகளை செய்வதில் தவறில்லை. கடமையும்கூட..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X