பொது செய்தி

தமிழ்நாடு

ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (17+ 18)
Share
Advertisement
சென்னை : தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று
ActorPandu, SingerKomagan, ProducerIbrahim, RIPPandu, RIPKomagan, RIPIbrahim,

சென்னை : தமிழ் சினிமாவில் விவேக், கே.வி.ஆனந்த் என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வரும் சூழலில் இன்று(மே 6) ஒரேநாளில் மூன்று பேர் மரணித்து இருப்பது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், நடிகரும், இயக்குனருமான விசு உள்ளிட்ட சில பிரபலங்கள் மறைந்தனர். இந்தாண்டும் அதேப்போன்று பல திரைப்பிரபலங்கள் அதிலும் கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமாக மறைந்து வருகின்றனர். கடந்த மார்ச் 14ல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தார். அதன்பின் நகைச்சுவை நடிகரும், பசுமை இந்தியா ஆர்வலருமான நடிகர் விவேக் ஏப்., 17ல் மறைந்தார். இவர்கள் மறைந்த சோகம் தீருவதற்குள் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் ஏப்.,30 அன்று கொரோனா தொற்றோடு, மாரடைப்பால் காலமானார்.


latest tamil news



இந்நிலையில் நேற்று 500 படங்களுக்கு மேல் நடித்தவரும், என்னடி முனியம்மா உள்ளிட்ட பாடல்களை பாடிய நாட்டுப்புற பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன் சென்னையில் வயது மூப்பால் காலமானார். இப்படி அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து தமிழ் சினிமா உலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று(மே 6) ஒரே நாளில் மூன்று பிரபலங்கள் மறைந்தது திரையுலகினர் இடையே இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‛ஆட்டோகிராப்' பட புகழ் பாடகரும், மாற்றுத்திறனாளியுமான கோமகன் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தனர். அதேப்போன்று 1980ல் ஒரு தலை ராகம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரை சினிமாவுக்கு தந்த இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிமும் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

இப்படி திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:34:17 IST Report Abuse
தல புராணம் கும்பமேளா வைரஸ் தாக்கம்.. ஒரே நாடு பூரா சுடுகாடு சித்தாந்தம்.. பத்தாண்டு ஊழல் அரசு, அதை பொத்தி பாதுகாத்த மோடி அரசு.. அதனால் வந்த சீரழிவு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:12:13 IST Report Abuse
தல புராணம் கும்பமேளா வைரஸ்சை நாடு முழுவதும் பரப்பி பா-சிச பாஜாக்கா தனது ஓரே நாடு, பூரா சுடுகாடு சித்தாந்தத்தை செவ்வனே நாடு முழுவதும் கொண்டு செல்கிறது.
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
06-மே-202118:42:57 IST Report Abuse
S.PALANISAMY மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இப்ராஹிம் தான் விஜயகாந்தையும் சினிமாவுக்கு அறிமுகம் செய்தவரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X