பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும்: வைராலஜிஸ்ட் கணிப்பு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரசின் 2வது அலை, மே மாதம் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் இருந்து குறைய துவங்கும்' என, வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.வேலூரை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கொரோனா தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராகவும்

புதுடில்லி: 'இந்தியாவை உலுக்கி வரும் கொரோனா வைரசின் 2வது அலை, மே மாதம் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் இருந்து குறைய துவங்கும்' என, வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் கணித்துள்ளார்.



latest tamil news




வேலூரை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பேராசிரியரும், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் கொரோனா தொற்று தடுப்புக் குழுவின் ஆலோசகராகவும் உள்ள வைராலஜிஸ்ட் ககன்தீப் காங் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் தற்போது மிகவும் தீவிரமாக இருக்கும் கொரோனா வைரசின் 2வது அலை மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து படிப்படியாகக் குறையத் துவங்கும் என, கணித்துள்ளோம்.




படிப்படியாக சரியும்



சில மாடல்கள், ஜூன் மாதம் முதல்வாரத்திலிருந்துதான் கொரோனா பாதிப்பு குறையத் துவங்கும் என, கணித்துள்ளன. ஆனால், சில காரணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் கணித்த வகையில் மே மாதம் நடுப்பகுதி அல்லது இறுதியிலிருந்து பாதிப்பு படிப்படியாக சரியத் துவங்கும்.


latest tamil news




சிறப்பான செயல்பாடு



தற்போது இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே கொரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன; நல்ல பாதுகாப்பை அளிக்கின்றன; நோய் தொற்று ஏற்படுவதிலிருந்து பெரும்பாலும் காக்கின்றன. மக்கள் வைரசில் பாதிக்கப்படுவதிலிருந்து காத்துக்கொண்டாலே, மற்றவர்களுக்கு உங்களால் நோயை பரப்பமுடியாது.

தற்போது நாள்தோறும் ஏறக்குறைய 4 லட்சம்பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இப்போதுள்ள சூழலில் கொரோனா வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு சிறப்பாக உதவும்.
இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202104:15:47 IST Report Abuse
சரவணன் மூணு மாசம் முழு ஊரடங்கு இல்லாம இது கொறையாது, கூடும்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:10:06 IST Report Abuse
தல புராணம் இவருக்கு வைரஸ் கையை பாத்து ஜோசியம் சொல்லத் தெரியுமாம்.. கும்பமேளா வைரஸ் இன்னும் ஆறுமாசத்துக்கு கும்மியடிக்கும்..
Rate this:
Vaanjinathan - Bangalore,ஆஸ்திரேலியா
07-மே-202111:33:55 IST Report Abuse
Vaanjinathanமர்ம நபர்கள் ஆட்டம் இன்னும் முடியவில்லையாம்.....
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
06-மே-202121:12:25 IST Report Abuse
kosu moolai தமிழ்நாட்டுலே மே ரெண்டுகைப்பறம் ஏற்கனவே கொறஞ்சிடுச்சு. சந்தேகம் இருந்தால் எங்க ஊர் ஊடகவிலயாளர்களை கேட்டு பாருங்கள் . அல்லது எங்கே தமிழ் சேநலை பாருங்க.அம்புட்டும் உண்மை..செங்கல் பெட்டில் மூப்பு காரணமாக இறந்தவர்கலய் வட இந்திய டிவி காரர்கள் திரித்து பொய் சொல்லிவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X