அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் உதயநிதி : அமைச்சராக வாய்ப்பில்லை

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை : ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு நாளை(மே 7) பதவியேற்க உள்ள நிலையில் அவரது மகனும், நடிகரும், எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ள உதயநிதிக்கு இப்போதைக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக., தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதோடு, தனிபெரும்பான்மையோடு திமுக., ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக
Udhaystalin, Udhayanidhi, Tamilnadu, DMK, MKStalin, உதயநிதி,

சென்னை : ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு நாளை(மே 7) பதவியேற்க உள்ள நிலையில் அவரது மகனும், நடிகரும், எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி உள்ள உதயநிதிக்கு இப்போதைக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக., தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதோடு, தனிபெரும்பான்மையோடு திமுக., ஆட்சி அமைக்கிறது. முதன்முறையாக முதல்வராக ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். இந்த தேர்தலில் இவரின் மகனும், நடிகருமான உதயநிதி, சென்னை சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கி 93,285 ஓட்டுகள் பெற்றதோடு, 69,355 ஓட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியும் பெற்றார். நாளை முதல்வராக ஸ்டாலின் மற்றும் அவரது எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.


latest tamil newsஉதயநிதிக்கு அமைச்சர் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே தனக்கு எந்த அமைச்சர் பதவியும் வேண்டாம் என தேர்தல் சமயங்களில் சில ஊடகங்களில் பேட்டியளித்து இருந்தார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றே கூறுகிறார்கள். தற்போது மு.மாறன் இயக்கத்தில் ‛கண்ணை நம்பாதே', அருண்ராஜா கமாராஜ் இயக்கத்தில் ஹிந்தியில் வெற்றி பெற்ற ‛ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் தமிழ் ரீ-மேக் படங்களில் நடிக்கிறார் உதயநிதி. இதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
ஆகவே தேர்தலுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும்போது இந்த படங்களில் நடிக்க சென்றுவிடுவார். இதேப்போன்று புதுமுக இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்டு, ஓகே மட்டும் சொல்லி இருக்கிறார். கால்ஷீட் தரவில்லை. ஆகவே தொடர்ச்சியாக படங்களில் அவர் பிஸியாக நடிப்பதால் தற்போதைய சூழலில் அமைச்சர் ஆகும் வாய்ப்பில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள் அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் நடக்கும் சமயங்களில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என அவரது நட்பு வட்டாரம் சொல்கிறது.


புதிய பொறுப்பு


அதேசமயம், தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், அந்தந்த தொகுதியின் புகார்களை மனுக்களாக பெற்றார். அந்தவகையில் ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன. திமுக., ஆட்சிக்கு வந்தால் இந்த மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன். இது எனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என ஸ்டாலின் உறுதியளித்தார். ஆகவே இப்போது இந்த மனுக்களை கவனிக்க தனி அமைப்பு ஏற்படுத்தி, அதை உதயநிதி பொறுப்பில் ஸ்டாலின் ஒப்படைப்பார் என்று திமுக., வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:42:40 IST Report Abuse
meenakshisundaram யோவ் எங்களுக்கு தெரியும்யா 'எப்ப சினிமா லே நுழையுனும் .எப்போ அமைச்சரவையில் நுழையணும்னு -அதான் அப்பா துண்டு போட்டு வச்சிருக்காரே
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07-மே-202105:00:18 IST Report Abuse
Mirthika Sathiamoorthi அரசியல் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட பிறகு, வாரிசு அரசியல்ன்னு கிண்டல் பண்ணுனவங்க முன்னாடி நின்னு ஜெயிததுக்கப்புறம் மந்திரி பதவி இல்லாமல் ஏன் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள்
Rate this:
Cancel
அடங்குல - Madurai,இந்தியா
07-மே-202104:07:07 IST Report Abuse
அடங்குல அப்போ MLA வேலைய பாக்க மாட்டாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X