கொரோனா தடுப்பூசி: காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021
Share
Advertisement
வாஷிங்டன்: 'கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்; ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு

வாஷிங்டன்: 'கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறோம்' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பல நாடுகளில் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்; ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.



latest tamil news



இந்த நிலையில், 'கொரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்க வேண்டும்' என, அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். 'கொரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமை கூடாது' என, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தின. ஆனால், இவ்விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மவுனம் காத்து வந்தன.


latest tamil news



இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரீன் வெளியிட்ட அறிக்கையில், 'உலகளாவிய சுகாதார நெருக்கடி, மற்றும் கொரோனாவின் அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கின்றோம். அறிவுசார் காப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். ஆனால், இந்தத் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சேவையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை நீக்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களது நிர்வாகத்தின் நோக்கம் பயனளிக்கக்கூடிய, பாதுகாப்பான தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் விரைந்து கிடைக்க வேண்டும் என்பதுதான்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X