கொரோனா நோயாளிகளுக்கு ரூ.35 ஆயிரம்: ஹரியானா முதல்வர் அறிவிப்பு

Added : மே 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சண்டிகர்: 'தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு வாரத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்' என, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் பலர் தனியார் மருத்துவமனையில்
HaryanaCM, ManoharLalKhattar, MedicalAssistanceScheme, BPL_Cardholders, Treatment, PrivateHospitals, தனியார் மருத்துவமனை, மனோகர் லால் கட்டர், கொரோனா, சிகிச்சை, நிவாரணம்

சண்டிகர்: 'தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு வாரத்திற்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்' என, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணம் அதிகமிருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு ஹரியானா அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் கூறுகையில், ‛கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நாள்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 7 நாள்களுக்கு என ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ரூ.1,000 ஒதுக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரூ.1,000 வீதம் 7 நாள்களுக்கு ரூ.7,000 வழங்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரசு சார்பில் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும்' என்றார். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், அவர்களது மருத்துவ செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
06-மே-202120:01:25 IST Report Abuse
M  Ramachandran அள்ளி விடுங்கள் பின்னால் மோடியின் மேல் பணம் கொடுக்க வில்லை என்று பழி போட்டுவிடலாம்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
06-மே-202119:27:13 IST Report Abuse
Rajagopal அட அறிவுக்கொழுந்தே? மூச்சு விட முடியாமல் திணறுபவன் கையில் பணத்தை திணித்தால் அவனுக்கு மூச்சு திரும்புமா? அவன் தகனத்திற்கு இந்த பணமா? அந்த பணத்தை மருந்து உற்பத்தி செய்ய, விநியோகிக்க, ஆக்சிஜன் உற்பத்தி செய்ய என்று உபயோகப்படுத்த வேண்டாம்? எல்லாவற்றுக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டால் வேலை நடந்ததாக அர்த்தமா? அத்தனை பணம் எங்கிருந்து வரும்?
Rate this:
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
07-மே-202109:28:04 IST Report Abuse
Ranjith Rajanசெய்தியை நல்ல படிங்க.. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ செலவில் ஒரு தொகையை அரசே ஏற்று கொள்கிறது என்று அர்த்தம். பணத்தை யாரும் கையில் திணிக்கவில்லை....
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
06-மே-202118:48:40 IST Report Abuse
sahayadhas நல்லது, ஜனங்களுக்கு நல்லதே செய்யுங்கள் . BJP கு நன்றி |
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X