பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் மீது தாக்குதல்; வாலை பிடித்து துன்புறுத்தல்!

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் காட்டு யானைகள் மீது இளைஞர்கள் சிலர் கற்களை வீசியும் தடியால் தாக்கியும் துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப்பகுதியில் ஆபத்தை உணராமல் காட்டு யானைகள் மீது இளைஞர்கள் சிலர் கற்களை வீசியும் தடியால் தாக்கியும் துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.latest tamil newsதிருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட திருமூர்த்தி மலை வனப்பகுதியில், குட்டிகளுடன் யானை கூட்டம் உலா வருவது வழக்கம். இந்த யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அங்குள்ள மலைவாழ் மக்கள் கருதுகின்றனர். இதனால் கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் யானைகளை அவர்களே வனப்பகுதிக்குள் விரட்டும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன் யானைக்கூட்டம் ஒன்று அப்பகுதிக்குள் வந்துள்ளது.


latest tamil news


யானைகளை பார்த்ததும் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கற்கள் மற்றும் கம்புகளால் அவற்றை தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஆபத்தை சிறிதும் உணராமல் யானைகளின் வாலை பிடித்து இழுத்து அதைத் துன்புறுத்தும் செயலிலும் ஈடுபட்டுள்ளனர். கற்களால் அடிபட்ட குட்டி யானைகள் வலி தாங்காமல் பிளிறவே, அதைக் கண்டு கோபமடைந்த தாய் யானை இளைஞர்களை ஆக்ரோஷமாக துரத்துவதும், யானையிடம் சிக்காமல் இருக்க இளைஞர்களும் சிறுவர்களும் ஓட்டம் பிடித்து மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.latest tamil news


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். உடுமலை வனச்சரக ரேஞ்சர் தனபால் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர் யானைகளை துன்புறுத்தியவர்களை தேடிவருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - kailasapuram,இந்தியா
10-மே-202117:33:07 IST Report Abuse
Indian மிருகம்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
07-மே-202105:32:31 IST Report Abuse
mindum vasantham Vanathi irunthu manifjarkalai appurapafuththa vum ivarkalukku kalvi arivu vum
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
07-மே-202105:14:40 IST Report Abuse
Kalaiselvan Periasamy இந்த மனித மிருகங்களை காட்டு யானைகள் கொல்வதில் தப்பில்லை . இந்த மனித மிருகங்கள் மலைவாழ் மக்களாக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X