பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சுறுத்தலால் 37 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே

Added : மே 06, 2021
Share
Advertisement
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (மே 6) முதல் 20ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதியில்லை
Southern Railway, Trains, Cancelled, தென்னக ரயில்வே, ரயில்கள், ரத்து

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 37 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (மே 6) முதல் 20ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 37 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.


latest tamil news



சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பல்லவன், வைகை, தேஜஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஏற்காடு, சேரன் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் போதிய பயணிகள் வரத்து இல்லாததால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X