‛கொரோனாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்; ஐஐடி மாணவர்களின் வீடியோ வைரல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‛கொரோனாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்'; ஐஐடி மாணவர்களின் வீடியோ வைரல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் மூன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.டில்லியில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டில்லி ஐஐடி மாணவர்கள் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா
Dont Panic, IIT_Delhi, Students, COVID, Positive Students, Share Video, Isolation Centre, கொரோனா, பயம் வேண்டாம், ஐஐடி, மாணவர்கள், வீடியோ

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் மூன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

டில்லியில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலர் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் டில்லி ஐஐடி மாணவர்கள் இதுகுறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் சிலர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மற்ற மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


டில்லி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்களை நன்றாக கவனிப்பதாக ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிஹெச்டி பயிலும் மாணவர் ராகுல் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‛தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டபோது குல்மோகர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றதாகவும், மருத்துவர்கள் பிசிஆர் சோதனை செய்து பின்னர் தனி வார்டில் அனுமதித்ததாகவும், செவிலியர்கள் தன்னை நன்றாக கவனிக்கவும் கூறியுள்ளார்.

இதன்காரணமாக தான் விரைவில் குணமடைந்து வீடு திரும்பியதாக அவர் தெரிவித்தார். இதனால் கல்லூரி மாணவர்கள் யாரும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பயப்படவேண்டாம் என்றும் தைரியமாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐஐடி மாணவர்களின் இந்த தன்னம்பிக்கை ஊட்டும் முன்னெடுப்பு வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X