பொது செய்தி

இந்தியா

நீதிபதிகளின் கருத்தை செய்தியாக்க ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: 'வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் கூறும் கருத்துகளைச் செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 'கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம்

புதுடில்லி: 'வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் கூறும் கருத்துகளைச் செய்தியாக்குவதற்கு ஊடகங்களுக்குத் தடை விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.latest tamil news'கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதற்கு எதிராகவும், வழக்கு விசாரணையின்போது நீதுபதிகள் தெரிவிக்கும் கருத்துகளைச் செய்தியாக்க ஊடகங்களுக்குத் தடை விதிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதன் மீது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.


latest tamil news


நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:
கருத்துரிமை என்பது நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகள் குறித்து செய்தி சேகரிப்பதையும் உள்ளடக்கியதே. எனவே நீதிமன்ற விசாரணை நடைமுறைகளைச் செய்தி ஆக்கக்கூடாது என, ஊடகங்களுக்குக் கூற முடியாது. புதிய தொழில்நுட்பம் மூலம் விரைவாக உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவது, பிரசுரிப்பது என்பது ஊடகப் பேச்சு மற்றும் கருத்துரிமையின் ஒரு பகுதியே. நீதிமன்ற நடவடிக்கை, நீதிபதி கருத்துகளை ஊடகங்கள் செய்தியாக்குவதற்குத் தடை விதிக்க முடியாது. எனவே செய்தி சேகரிப்பது, வெளியிடுவது தொடர்பாக அரசியல் சாசன அமைப்புகள் குறை கூறுவதை விடுத்து தங்களது செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கடுமையானதுதான். ஆனால், கொரோனா பரவத் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று ஆணையத்தைத் தீர்க்கமாகக் குற்றவாளி எனக் கூறவில்லை.


latest tamil news


ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கருத்துகளைக் கூறுவது என்பது சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு தீர்வை எட்டுவதற்கே. அதேவேளையில் கருத்துகள் அனைத்தும் தீர்ப்பு எழுதும்போது அதில் பிரதிபலிப்பதில்லை என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால் வழக்கில் எழுந்த இந்தப் பிரச்சினையைத் தவிர்த்திருக்காலம்.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்தைத் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவில் எந்தவித முகாந்திரமும் காண முடியவில்லை. இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
07-மே-202107:39:05 IST Report Abuse
RajanRajan குற்றவாளிகளை இனம் கண்டு தண்டிக்க இயலாத உளுத்து போன சட்டங்கள் இருந்தென்ன லாபம். நமது சட்ட இயல் பிரிட்டிஷ் நாகரீகத்தை உதறி தள்ளிவிட்டு கருட புராணாத்து சட்டமாக்க வேண்டும். கருட புராணத்து சட்ட முறைகள் இஸ்லாமிக் சட்டத்தை வீட பன்மடங்கு அதிகமானது. சும்மா எப்ப பார்தாலும் ஒரு வாய்தா ஜாமீன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என நீதிபதிகளும் நீதியும் ஒய்வு பெற்ற கதை தான் நாம் கண்ட சட்ட ஐக்கியம். ஜெய் ஸ்ரீராம்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-மே-202104:20:03 IST Report Abuse
Cheran Perumal நாங்க கருத்து சொல்லறதே அடுத்த நாள் எங்க பேரு பேப்பர்லயும் டிவி லயும் வருவதை பார்க்கத்தானே?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மே-202120:58:55 IST Report Abuse
தல புராணம் India reported a 412,262 new Covid-19 cases Thursday, a new single-day record, according to a CNN tally compiled from figures released by the Indian Health Ministry.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X