ஆக்சிஜன் சப்ளை: மாற்றி மாற்றி பேசும் கெஜ்ரிவால் அரசு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜனை வழங்கியதற்காக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அவரது அரசோ கோர்ட்டில் ஆக்சிஜன் வழங்கவில்லை என கூறியுள்ளது.தலைநகர் டில்லியில் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அங்கு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக ஆக்சிஜன் சப்ளையில் சிக்கல்
ArvindKejriwal, DelhiGovt, Differ, In Court, Oxygen, ThanksPM, டில்லி, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி அரசு, ஆக்சிஜன், பிரதமர் நன்றி, உச்சநீதிமன்றம்

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்சிஜனை வழங்கியதற்காக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அவரது அரசோ கோர்ட்டில் ஆக்சிஜன் வழங்கவில்லை என கூறியுள்ளது.

தலைநகர் டில்லியில் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அங்கு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக ஆக்சிஜன் சப்ளையில் சிக்கல் மற்றும் அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை அம்மாநில தலைப்புச் செய்திகளாக உள்ளன. திங்களன்று 40-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆக்சிஜன் இருப்பு குறைவதாக அவசரசெய்தி அனுப்பின. புதனன்று டில்லிக்கு தேவையான ஆக்சிஜனை உறுதி செய்வதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேவையான ஆக்சிஜனை விநியோகித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமருக்கு அவர் இன்று எழுதிய கடிதத்தில், “டில்லிக்கு ஒவ்வொரு நாளும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை ஏற்பாடு செய்ய உதவுமாறு நாங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். நேற்று முதல் முறையாக டில்லிக்கு 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்தது. டில்லி மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.” என்றார்.


latest tamil newsஅதே சமயம் டில்லிக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, “டில்லி மக்கள் இறந்து கொண்டுள்ளனர். 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து அவமதிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை உங்களால் நீர்த்து போகச் செய்ய முடியாது.” என்றார். அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆக்சிஜன் விநியோகத்தில் பிரச்னையில்லை. தவறான நிர்வாகத்தால் தான் பிரச்னை என்றது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
08-மே-202118:45:42 IST Report Abuse
mathimandhiri விவசாயி போர்வையில் ஒரு பெரிய கூட்டத்தை வைத்துச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறானே, அந்தக் கூட்டத்துக்காகத் தான் கூடுதல் டிமாண்ட்.// மேலிடத்து கமாண்ட் படி கேட்கிறான். அவ்வளவு தான். கணக்கெல்லாம் கொடுக்க மாட்டான்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-மே-202111:45:29 IST Report Abuse
Sridhar மத்திய அரசு கூறியதுபோல, கொடுத்த ஆக்சிஜென் அளவுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என முதலில் கண்டறியவேண்டும். 700 MT கொடுத்தவுடனே மேலும் 10000 படுக்கை வசதிகள் தயார் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக 950 MT கொடு 740 MT கொடு என்று சொன்னதெல்லாம் எதற்கு?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
07-மே-202110:31:54 IST Report Abuse
konanki புராணங்களில் ஆயிரம் தலை மூலம் விஷத்தை கக்கி மக்களை கொன்ற பாம்புகள் இருப்பது கூறப்படுகிறது. அதை பகுத்தறிவு வாதிகள் ஏற்க மறுத்தார் கள். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் பார்த்த பிறகு அது உண்மை என்று ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X