விரைவில் வருகிறது உயிரி காகிதப் பை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விரைவில் வருகிறது உயிரி காகிதப் பை

Added : மே 06, 2021 | கருத்துகள் (1)
Share
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இருந்தும், சிறிது இடைவெளிக்குப் பிறகு, பிளாஸ்டிக் பைகள் தலைதுாக்கத் துவங்கி விடுகின்றன.புதிதாக பரிசோதிக்கப்பட்டு வரும் 'உயிரி காகிதம்' இதை தடுக்க உதவலாம். 'பயோ ஆக்டிவ் பேப்பர்' என்று அழைக்கப்படும் இந்தக் காகிதம், ஜெர்மனியிலுள்ள 'பிரான்ஹோபர்' குழுமத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.அடிப்படையில், உயிரி
 விரைவில் வருகிறது உயிரி காகிதப் பை

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இருந்தும், சிறிது இடைவெளிக்குப் பிறகு, பிளாஸ்டிக் பைகள் தலைதுாக்கத் துவங்கி விடுகின்றன.புதிதாக பரிசோதிக்கப்பட்டு வரும் 'உயிரி காகிதம்' இதை தடுக்க உதவலாம். 'பயோ ஆக்டிவ் பேப்பர்' என்று அழைக்கப்படும் இந்தக் காகிதம், ஜெர்மனியிலுள்ள 'பிரான்ஹோபர்' குழுமத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

அடிப்படையில், உயிரி காகிதங்கள், மறுசுழற்சி காகிதத்தால் ஆனவை. இந்தப் பைகளின் உட்புறத்தில் மெழுகு மற்றும் சில புரதங்களின் பூச்சுக்கள் இருக்கும். இதனால். உள்ளே வைக்கப்படும் பொருளின் ஈரம், அதிக நாட்கள் உலராமல் இருக்கும். பாக்டீரியாக்களும் உள்ளே உருவாகாது என்பதால், கெடாமலும் இருக்கும்.

பையின் உட்புறத்தில் பூசுவதற்கு தேன் மெழுகு, கேண்டிலைலா பூச்செடி மெழுகு, பனை மெழுகு போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை, இயற்கை முறையில் தயாரானவை. ஏற்கனவே கிடைப்பவையும் கூட. புரதங்களும் சூரியகாந்தி விதை போன்ற தாவர புரதங்களே.

இந்த பைகளில், 'ஜிப்-லாக்' முறையில் மூட முடிவதால், இவற்றை பல முறை பயன்படுத்தலாம். காலப்போக்கில் நைந்து போனால், சாதாரண காகிதம் போலவே மறுசுழற்சிக்கும் போட்டுவிடலாம். இத்தகைய உயிரிப் பைகள் ஜெர்மனியில் மட்டுமல்ல, இஸ்ரேல், கனடா போன்ற நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இவை நடைமுறைக்கு வந்தால்நல்லது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X