சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பிரிட்டனின் வருங்கால பறக்கும் வீரர்கள்!

Added : மே 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வெறும் விஞ்ஞானக் கற்பனையாக இருந்தது அது. பிறகு, ஆர்வக் கோளாறுகள், பொழுதுபோக்காளர்களை ஈர்க்கக் கூடியதாக மாறியது. இப்போது, அதை ராணுவத்தினரே பயன்படுத்தலாமா என்று தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.'அயர்ன் மேன்' கதைகளில் வரும், 'ஜெட் சூட்' எனப்படும் பறக்கும் கருவியை முதுகில் கட்டிக் கொள்ள வேண்டும். அதிலுள்ள குட்டி 'ஜெட்' இயந்திரம் ஒரு மனிதரை அலேக்காக வானில் பறக்க
 பிரிட்டனின் வருங்கால பறக்கும் வீரர்கள்!

வெறும் விஞ்ஞானக் கற்பனையாக இருந்தது அது. பிறகு, ஆர்வக் கோளாறுகள், பொழுதுபோக்காளர்களை ஈர்க்கக் கூடியதாக மாறியது. இப்போது, அதை ராணுவத்தினரே பயன்படுத்தலாமா என்று தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

'அயர்ன் மேன்' கதைகளில் வரும், 'ஜெட் சூட்' எனப்படும் பறக்கும் கருவியை முதுகில் கட்டிக் கொள்ள வேண்டும். அதிலுள்ள குட்டி 'ஜெட்' இயந்திரம் ஒரு மனிதரை அலேக்காக வானில் பறக்க வைக்கும்.

நிஜமாகவே ஜெட் சூட்டை தயாரிக்கும்,'கிராவிட்டி இண்டஸ்டிரீஸ்' அண்மையில் பிரிட்டனின் ராயல் கப்பற்படையினருக்கு அதை சோதித்துக் காட்டியுள்ளது. ஒரு வீரர், கிராவிட்டி ஜெட் சூட்டை முதுகில் கட்டி, சிறிய படகிலிருந்து பறந்து கிளம்பி, பெரிய நடுத்தர விமானப்படைக் கப்பல் ஒன்றில் போய் இறங்குகிறார்.

இந்தக் காணொலி, இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்னொரு காட்சியில், மூன்று வீரர்கள், அதே கப்பல் மீது வந்து இறங்குகின்றனர்.பிரிட்டனின் ராணுவ அதிகாரிகள் இந்த சோதனைகளைப் பார்த்து அசந்துவிட்டனர். எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில், பிரிட்டன் தன் முதல் ஜெட் சூட் படையை அறிவிக்கக்கூடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202121:12:57 IST Report Abuse
Krishnan B This may be useful even in rescue operations in highrise buildings etc.,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X