சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தானோட்டி தெருக்கூட்டி வாகனம்!

Added : மே 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஓராண்டு சோதனைகளுக்குப் பிறகு, ஹெல்சிங்கி நகரில் அது உலா வரத் துவங்கிவிட்டது. பின்லாந்தைச் சேர்ந்த, 'ட்ரோம்பியா டெக்னாலஜிசின்' படைப்பான, 'ட்ரோம்பியா பிரீ' என்ற தானோட்டி தெருக்கூட்டும் இயந்திரம், இரவு நேரத்தில், ஹெல்சிங்கியின் பாதைகளை போகிற போக்கில் சுத்தம் செய்யத் துவங்கியுள்ளது.வெயில், மழை, பனி என எந்த பருவ நிலையிலும் சளைக்காமல் குப்பையை அகற்றும்படி
 தானோட்டி தெருக்கூட்டி வாகனம்!

ஓராண்டு சோதனைகளுக்குப் பிறகு, ஹெல்சிங்கி நகரில் அது உலா வரத் துவங்கிவிட்டது. பின்லாந்தைச் சேர்ந்த, 'ட்ரோம்பியா டெக்னாலஜிசின்' படைப்பான, 'ட்ரோம்பியா பிரீ' என்ற தானோட்டி தெருக்கூட்டும் இயந்திரம், இரவு நேரத்தில், ஹெல்சிங்கியின் பாதைகளை போகிற போக்கில் சுத்தம் செய்யத் துவங்கியுள்ளது.

வெயில், மழை, பனி என எந்த பருவ நிலையிலும் சளைக்காமல் குப்பையை அகற்றும்படி ட்ரோம்பியா பிரீ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய அளவுள்ள, 'வாக்கும் கிளீனர்' போல இருந்தாலும், நான்கு சக்கரங்கள் கொண்ட ட்ரோம்பியா பிரீயில், நவீன தானோட்டிகளில் உள்ளதைப் போலவே, 'லிடார்' மற்றும் சாலையை நோக்கும் கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு சில்லு போன்றவை உள்ளன. எனவே, இதை தெருக்கூட்டும் தானோட்டி வாகனம் என்பதே சரியாக இருக்கும்.

ஹெல்சிங்கி நகரின் சில பகுதிகளை சுத்தம் செய்யத் துவங்கியுள்ள ட்ரோம்பியா, 2022 வாக்கில் வர்த்தக ரீதியில் ஐரோப்பாவின் பிற நகர்களிலும் விற்பனைக்கு வரும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202120:20:23 IST Report Abuse
ramkumar Govt should hasten solid/ liquid waste management with technology. our garbage is massive which needs scientific annihilation. otherwise within few years our towns , cities will be unfir for living and may become breeding place virus.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X