மோதிர தொழில்நுட்பம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மோதிர தொழில்நுட்பம்!

Added : மே 06, 2021
Share
நீங்கள் சுமந்து செல்லும் சாவி, வங்கி அட்டைகள், பணம் போன்ற அனைத்தையும் காணாமல் போகச் செய்யும் ஒரு தொழில்நுட்பம் வரவிருக்கிறது. அது மோதிர வடிவில் இருக்கக் கூடும்.ஏற்கனவே. கடைகளில் பொருட்களின் மீது, 'பார் கோடு' போல ஒட்டப்படும் ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பம்தான் இப்படி புது அவதாரம் எடுக்க இருக்கிறது. ரேடியோ அலைவரிசை மூலம் அடையாளத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பம்
மோதிர தொழில்நுட்பம்!

நீங்கள் சுமந்து செல்லும் சாவி, வங்கி அட்டைகள், பணம் போன்ற அனைத்தையும் காணாமல் போகச் செய்யும் ஒரு தொழில்நுட்பம் வரவிருக்கிறது. அது மோதிர வடிவில் இருக்கக் கூடும்.

ஏற்கனவே. கடைகளில் பொருட்களின் மீது, 'பார் கோடு' போல ஒட்டப்படும் ஆர்.எப்.ஐ.டி., தொழில்நுட்பம்தான் இப்படி புது அவதாரம் எடுக்க இருக்கிறது. ரேடியோ அலைவரிசை மூலம் அடையாளத்தை தெரிவிக்கும் தொழில்நுட்பம் இது.

ஜெர்மனியைச் சேர்ந்த, 'கினிமாட்டம் புராஜக்ட்' என்ற திட்டத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனித அடையாளம் மற்றும் வசதிகளை மனதில் வைத்து, இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்து சோதித்து வருகின்றனர்.

மோதிர வடிவில் இருக்கும் இந்த அடையாள தொழில்நுட்பம், எளிதில் தொலையாது. தவிர, பாக்கெட் அல்லது பர்ஸ்களில் இருந்து சிரமப்பட்டு எடுக்க வேண்டியதில்லை. அந்தக் கால ராஜ முத்திரை போல, எவரும் தன் அடையாளத்தை ஆர்.எப்.ஐ.டி., மோதிர வடிவில் அணிந்து செல்லலாம்.

கார் கதவு, வீட்டுக் கதவு, வங்கி ஏ.டி.எம்., என்று எங்கும் இதை காட்டினால் போதும்.உடனே உங்களை கணினிகள் அடையாளம் கண்டு, உங்களுக்கு வேண்டியதை செய்து தரும். இதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X