அரசியல் செய்தி

தமிழ்நாடு

காலியாகிறது கமல் கட்சி கூடாரம்: நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

Updated : மே 07, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (110)
Share
Advertisement
சென்னை : 'தோல்விக்கு பின் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை; மாறுவார் என்ற நம்பிக்கையுமில்லை' எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய
Kamal, Kamal Haasan, MNM, காலி,கமல், நிர்வாகிகள், விலகல்

சென்னை : 'தோல்விக்கு பின் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை; மாறுவார் என்ற நம்பிக்கையுமில்லை' எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ்; பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய கமல் கூட வெற்றி பெற முடியாத நிலையில், மொத்த கூடாரமும் காலியாகத் தொடங்கியுள்ளது.
தன் ராஜினாமா குறித்து மகேந்திரன் கூறியதாவது: கட்சியின் பெரிய தோல்விக்கு பிறகும், கமல் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல் மீண்டும் நம்மவராக செயல்பட வேண்டும்.


latest tamil newsதமிழகத்தைச் சீரமைப்பதைக் காட்டிலும், முதலில் கட்சியைச் சீரமைப்பது அவசியம். இவ்வளவு பெரிய தோல்விக்கு பிறகும், கமலைச் சுற்றியுள்ள முகஸ்துதி கூட்டம், கட்சியைப் பிளவு படுத்தும் நடவடிக்கையிலேயே தீவிரமாக உள்ளது. கமலும் அவரை மாற்றிக் கொள்ளவில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

முக்கிய நிர்வாகிகள் விலகலை அடுத்து, ம.நீ.ம., ஊடகப்பிரிவு சார்பில் வெளியான அறிக்கை: கட்சியின் நிர்வாக குழு கூட்டம், தலைவர் கமல் தலைமையில் நடந்தது. கட்சியை வலுப்படுத் துதல், மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகக்குழு உறுப்பினர்களான மகேந்திரன், முருகானந்தம், மவுரியா, தங்கவேல், உமாதேவி, குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் ஆகியோர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதை ஏற்பதும், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதும், தலைவர் கமல் முடிவு செய்யட்டும் என, நிர்வாகிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
துணை தலைவர் பொன்ராஜ் கூறுகையில், ''தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சியைச் சீரமைக்க, முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். அதன் மீதான முடிவை கமலே எடுப்பார்,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V. Anantha narayanan - Annanur, Chennai,இந்தியா
09-மே-202121:22:15 IST Report Abuse
V. Anantha narayanan பா.ஜா.வை எளிதில் வென்று விடலாம் என்ற கமலின் தேர்தல் வியூகம் தொற்று விட்டது. கை சின்னத்தை விட டார்ச் லைட்டு அதிக வோட்டு தங்கியது கோவை தெற்கு தொகுதியில்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
08-மே-202117:08:25 IST Report Abuse
mathimandhiri இன்னாருக்கு வெற்றி தோல்வி எல்லாம் சும்மா ஒள ஒளா கட்டிக்கு தான். மிஷனரி எஜமானர்களுக்குத் தான் குறி தப்பாமல் பெரிய வெற்றி . மிஷன் சக்ஸஸ்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
08-மே-202112:44:35 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி சொல்படி கட்சி ஆரம்பித்தார் .... திமுக கூட்டணி யை வீழ்த்த வியூகம் வகுத்து கொடுக்கப்பட்டது .... நினைத்தபடி நிறைவேறவில்லை .... இவரால் எதுவும் லாயக்கில்லை என்பதை புரிந்துகொண்ட பிஜேபி இப்பொஅ அவரது சகாக்களை அவரிலிருந்து பிரித்து கொஞ்சம் நாட்கள் கழித்து அவர்களை நேராக பிஜேபி யிலேயே சேர்ப்பது தான் திட்டம் ....
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
08-மே-202122:15:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANமயிலாப்பூரில் இப்படி பட்ட மூளையெல்லாம் இருக்குதா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X