பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 24,878பேருக்கு கொரோனா: 195பேர் உயிரிழப்பு

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195பேர் உயிரிழந்து உள்ளனர். 20,062பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,52,130மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 24,898பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,27பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 24,898பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 195பேர் உயிரிழந்து உள்ளனர். 20,062பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,52,130மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 24,898பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,27பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங் களை சேர்ந்தவர்கள், 24,871பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,35,45,987மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14,683பேர் ஆண்கள், 10,215பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7,82,299ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,15,163ஆகவும் அதிகரித்து உள்ளது.

21,546பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,51,058 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 195பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில்,81பேர் தனியார் மருத்துவமனையிலும், 114பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,974 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X