‛ஒவ்வொரு பூக்களுமே' கோமகன் பெயர் சொல்கிறதே

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021
Share
Advertisement
‛ஒவ்வொரு பூக்களுமே'கோமகன் பெயர் சொல்கிறதேதோல்வியால் துவண்டவர்களுக்கும், அவநம்பிக்கை மிகுந்தவர்களுக்கும் தன்னம்பிக்கைதரும் பாடலாக பட்டிதொட்டியெங்கும் இன்றும் பாடப்பட்டும், கேட்கப்பட்டும் வரும் இயக்குனர் சேரனின் ‛ஆட்டோகிராப்' படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் புகழ் பெற்ற பார்வையற்றவரான கோமகனும் கொரோனுவுக்குlatest tamil news‛ஒவ்வொரு பூக்களுமே'கோமகன் பெயர் சொல்கிறதே

தோல்வியால் துவண்டவர்களுக்கும், அவநம்பிக்கை மிகுந்தவர்களுக்கும் தன்னம்பிக்கைதரும் பாடலாக பட்டிதொட்டியெங்கும் இன்றும் பாடப்பட்டும், கேட்கப்பட்டும் வரும் இயக்குனர் சேரனின் ‛ஆட்டோகிராப்' படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் புகழ் பெற்ற பார்வையற்றவரான கோமகனும் கொரோனுவுக்கு பலியாகியுள்ளார்.


latest tamil news


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சார்ந்த கோமகன் பார்வைக்குறைபாடுடன்தான் பிறந்தார், ஆனால் அதுபற்றி எப்போதும் கவலைப்பட்டவர் இல்லை. ஒரு குறையிருந்தால் கூடுதலாக இன்னோன்றில் நிறையிருக்கும் என்பதற்கேற்ப அருமையான குரல்வளம் கொண்டவர்.இதனால் சிறுவயது முதலே மேடைப்பாடகராக வலம் வந்தார்.


latest tamil news


ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) வேலை கிடைத்ததன் காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்தவர் வேலை நேரம் தவிர மீதம் நேரம் முழுவதும் இசைக்காகவே செலவிட்டார்.
‛கோமகனின் ராகப்ரியா' என்ற இசைக்குழுவை துவங்கினார் இதில் இவர் உள்பட இருபத்தைந்து இசைக்கலைஞர்கள் இடம்பெற்றிருந்தனர்.இந்த இருபத்தைந்து இசைக்கலைஞர்களுக்கும் பார்வை கிடையாது என்பதுதான் விசேஷம்.அகத்திலும் முகத்திலும் விசாலமான பார்வை கொண்ட கோமகனின் மனைவி அனிதாதான் இந்த இசைக்குழுவிற்கு கண்களாக இருந்தார்.
இவரது இசைக்கச்சேரிக்கு தற்செயலாக சென்ற இயக்குனர் சேரன், தான் அப்போது எடுத்துவந்த ஆட்டோகிராப் படத்தில் இவரையும் இவரது இசைக்குழுவையும் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார் இதனால் விளநைததுதான் ‛ஒவ்வொரு பூக்களுமே'பாடல்.பாடலாசிரியர் விஜய் உணர்ச்சி பூர்வமாக எழுதிக் கொடுத்த பாடலை உணர்வுபூர்வமாக சித்ரா பாடினார். (இந்தப் பாடலின் மூலம் அந்த வருடம் விஜய்க்கும் சித்ராவிற்கும் தேசிய விருது கிடைத்தது) மேடையில் நடிகை சினேகா அற்புதமாக இந்தப்பாடலுக்கு உடல்மொழியை கொடுத்திருந்தார், கோமகன் கோமகனாகவே பாட்டு முழுவதும் வலம் வந்ததுடன் கடைசியில் , 'மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும், அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்' என்ற வரிகளையும் உணர்ச்சிப்பூர்வமாக பாடியிருப்பார்.
இந்தப் படத்திற்கு பிறகு கோமகனின் இசைக்குழு பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது, இசைக்குழு பிரபலமடைந்தது என்பதைவிட இவரது இசைக்குழுவில் இடம் பெற்றிருந்த பார்வையற்ற இருபத்தைந்து இசைக்கலைஞர்களின் குடும்பங்களும் வாழ்க்கையில் வளமும் சந்தோஷமும் பூத்துக்குலுங்கியது என்பதுதான் முக்கியம்.
கோமகனின் இந்த முயற்சியால் அடைபட்ட சுவர்களுக்குள் பாடிக்கொண்டிருந்த பல பார்வையற்ற பாடகர்கள் பலர் வெளிஉலகிற்கு வந்தனர் அவர்களுக்கான முதல் மேடையாககவும் கோமகனின் மேடை அமைந்தது.இசைக்குழு தவிர இசைப்பள்ளி ஒன்றும் நடத்திவந்தார் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
எல்லோரது வாழ்க்கையையும் சீண்டிப்பார்க்கும் கொரோனா கோமகனின் வாழ்க்கயைிலும் நுழைந்ததன் விளைவு இன்று கோமகன் நம்மிடம் இல்லை பார்வையற்ற குழுவினரின் கண்களில் இருந்து தாரை தாரையாக வழியும் கண்ணீரையும் எதிர்கால கவலைகளையும் இனி துடைப்பது யார்?
-எல்.முருகராஜ்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X