தேர்தல் ஆணைய வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Updated : மே 08, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (10+ 8)
Share
Advertisement
புதுடில்லி:நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்கக் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'இதுபோன்ற நடவடிக்கைகள் பிற்போக்குதனமானது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.பிரசாரம்தமிழகத்தின் கரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றும் வகையில்
 தேர்தல் ஆணையம், வழக்கு, சுப்ரீம் கோர்ட்,தீர்ப்பு

புதுடில்லி:நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்கக் கோரிய தேர்தல் ஆணையத்தின் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'இதுபோன்ற நடவடிக்கைகள் பிற்போக்குதனமானது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


பிரசாரம்

தமிழகத்தின் கரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி, முன்னாள் அமைச்சரும், கரூர் அ.தி.மு.க., வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், 'கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், தனிமனித இடைவெளியின்றி, அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் கமிஷன் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை' என, கடும் கண்டனம் தெரிவித்தனர்.சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'தேர்தல் ஆணையம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகள், நீதிமன்ற உத்தரவில் இருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.

விசாரணையின் போது, 'கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக் கூறினால், அந்த தவறை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். உயர் நீதிமன்றம் உள்நோக்கத்துடன் கருத்துக் கூறவில்லை' என அறிவுறுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.


நடவடிக்கை

இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:'தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் கூட சுமத்தலாம்' என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது மிகவும் கடுமையானது; பொருத்தமற்றவை தான். கொரோனா தொற்று பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம் என, தீர்க்கமாக முடிவு செய்து விட முடியாது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்துகள், நீதிமன்ற உத்தரவின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்படவில்லை. எனவே, அதை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இது குறித்து, மேலும் ஆராய வேண்டிய அவசியமில்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, உயர் நீதிமன்றங்கள் மிகவும் சிறப்பாக கண்காணித்து வருகின்றன. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் நீதித்துறை விஷயங்களுக்கும் நீண்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது.அது போன்ற பிற்போக்குதனமான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களுக்கானது மட்டுமல்ல; அந்த உரிமை ஊடகங்களுக்கும் உண்டு. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (10+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
08-மே-202102:41:31 IST Report Abuse
.Dr.A.Joseph தனிமனிதனின் வரியை சம்பளமாக பெரும் அனைவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களாவர்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
07-மே-202117:56:24 IST Report Abuse
konanki சார் எலகஷன் கமிஷன் உச்ச நீதிமன்றம் அணுகியது சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்தை எதிர்த்து தான். வழக்கு விசாரணை க்கு எடுக்க பட வேண்டும் என்ற காரணத்திற்காக ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தது. அவர்கள் வாதம் சென்னை ஹை கோர்ட் கருத்தை எதிர்த்து தான் இருந்தது.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
07-மே-202117:52:00 IST Report Abuse
konanki உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த முதல்வர் யோகி மற்றும் நிர்வாகம் யூகான் வைரஸ் பரவல் காரணமாக நடத்த விரும்பவில்லை. ஆனால் அலஹாபாத் ஹை கோர்ட் முடிவின் காரணமாக நடத்தியது. இந்த தேர்தல் உ பி மில் அதுவும் கிராமப் புறங்களில் யூக்கான் வைரஸ் பரவ காரணம் என கூறப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்ட 800 அரசு பள்ளி ஆசிரியர்கள் மரணம். காரணம் யூகான் வைரஸ். சென்னை உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் எலக்ஷன கமிஷனை கொலைக் குற்றச்சாட்டு கூறியது போல் உபி மரணம் காரணமாக கொலை குற்றச்சாட்டு எழுப்புமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X