அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகேந்திரன் ஒரு துரோகி: கமல் ஆவேசம்

Updated : மே 08, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (139)
Share
Advertisement
சென்னை : நடிகர் கமலில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் விலகியதையடுத்து, மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், மகேந்திரன் ஒரு துரோகி என கமல் ஆவேசமாக கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம். களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர்

சென்னை : நடிகர் கமலில் மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் விலகியதையடுத்து, மூத்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், மகேந்திரன் ஒரு துரோகி என கமல் ஆவேசமாக கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்துள்ளனர் என்பதை கண்கூடாக கண்டோம். களையெடுக்கப்பட வேண்டிய துரோகிகளில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பலரை தலையெடுக்க விடாமல் தடுத்ததே இவரது சாதனை.



latest tamil news


தன்னை எப்படியும் நீக்கி விடுவர் என்பதை அறிந்தே புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம் தான்.கோழைகளை நாம்பொருட்படுத்த வேண்டியதில்லை. மண், மொழி காக்க களத்தில் நிற்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



டுவிட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது:



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
10-மே-202109:13:43 IST Report Abuse
VeeJay கமலுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னுமும் வேண்டும். இனி கமல் ஓட்டு கேட்டு எந்த தொகுதியிலும் காலை வைக்க முடியாது
Rate this:
Cancel
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
10-மே-202109:04:28 IST Report Abuse
VeeJay இது உட்கட்சி விவகாரம் இதற்கு ஏன் இவ்வளுவு முக்கியத்துவம் ?
Rate this:
Cancel
S BASKARAN - trichy,இந்தியா
09-மே-202118:45:56 IST Report Abuse
S BASKARAN மஹேந்திரன் உண்மை மட்டும் சொல்கிறார் கமல் பிரோடு POLITITION
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X