பொது செய்தி

இந்தியா

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகுங்க

Updated : மே 08, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதை எதிர்கொள்ள, மத்திய அரசு இப்போதே தயாராக வேண்டும்; தேவையான அளவுஆக்சிஜனை, கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டில்லிக்கு, தினமும், 700 டன் ஆக்சி ஜனை சப்ளை செய்ய, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம்
கொரோனா 3வது அலை,மத்திய அரசு ,உச்ச நீதிமன்றம்

புதுடில்லி:'கொரோனா மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இதை எதிர்கொள்ள, மத்திய அரசு இப்போதே தயாராக வேண்டும்; தேவையான அளவுஆக்சிஜனை, கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டில்லிக்கு, தினமும், 700 டன் ஆக்சி ஜனை சப்ளை செய்ய, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், 'மத்திய அரசு அதிகாரிகள் மீது, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது' என, உயர் நீதிமன்றம் கேட்டிருந்தது.
அறிக்கைஇதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள்சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த அறிக்கையில், 'டில்லிக்கு, 740 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டுள்ளது. டில்லி யில் உள்ள, 56 மருத்துவமனைகளை ஆய்வு செய்த தில், அங்கு, போதுமான ஆக்சிஜன் இருப்பது தெரிய வந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: டில்லிக்கு, 740 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டுள்ளது திருப்தியளிக்கிறது. ஆனால், டில்லிக்கு தேவையான அளவு ஆக்சி ஜனை, மத்திய அரசு தொடர்ந்து அளித்தால், மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவு பாதிக்கப்படலாம். அதனால், ஆக்சிஜன் சப்ளை குறித்து, மத்திய அரசு நன்கு திட்டமிட வேண்டும். இப்போது, படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் ஆகியவற்றின் தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளன. அதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான திட்டத்தை, மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவலை தவிர்க்க முடியாது என, தகவல் வந்துள்ளது.

இந்த அலை, குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. குழந்தைகள் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைக்கு அவர்களை, பெற்றோர் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த

வேண்டும்.மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு, மத்திய அரசு தயாராக வேண்டும். ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேல்முறையீடு'கர்நாடகாவுக்கு தினமும் வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை, 965 டன்னிலிருந்து, 1,200 டன்னாக, மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.


பிரதமருக்கு நன்றி!டில்லிக்கு தினமும், 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை ஏற்பாடு செய்து தரும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இதையேற்று, 740 டன் ஆக்சிஜன் சப்ளை செய்ததற்காக,பிரதமருக்கு நன்றி. அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர்,ஆம் ஆத்மி.


மோடி ஆய்வுபல்வேறு மாநிலங்களில், கொரோனா பாதிப்பு குறித்து, பிரதமர் மோடி நேற்று, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மருந்துகளின் இருப்பு குறித்தும், பிரதமர் ஆய்வு செய்தார். தடுப்பூசி திட்டம் பற்றி ஆய்வு செய்தபிரதமரிடம், 17.7 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி, 'டோஸ்' மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டது.''தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க வேண்டும்; மாநிலங்களில் தடுப்பூசி போடப்படும் வேகம் குறையக்கூடாது,'' என, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம்பிரதமர் வலியுறுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-மே-202117:05:32 IST Report Abuse
Sethuraman Mahadevan Sethuraman Mahadevan
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-மே-202116:54:12 IST Report Abuse
nan மாஸ்க் போட்டவர்களை வேறு கிரஹத்தினாற்போல் பார்ப்பது, மாஸ்க்கை மூக்குக்கு கீழ் போடுவது , தாடிக்கு போடுவது இப்படி இருந்ததால் சுடுகாடு ஆனது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
07-மே-202102:43:01 IST Report Abuse
தல புராணம் ஒரே நாடு பூரா சுடுகாடு.. சங்கிக எல்லாரும் விறகுகட்டையை வாங்கி, மோடி செயலியில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. உங்களுடைய கல்கி புருஷர் வந்துட்டார்..
Rate this:
Natarajan Kandasamy - Erode,இந்தியா
07-மே-202110:13:05 IST Report Abuse
Natarajan Kandasamyஆர்டர் கொடுத்து விட்டாயா...
Rate this:
Truth Behind - Tamilnadu,
07-மே-202119:47:37 IST Report Abuse
Truth BehindYou also get ready then....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X