பொது செய்தி

இந்தியா

'முன்கள பணியாளர் பட்டியலில் பத்திரிகையாளர்களை இணையுங்கள்'

Updated : மே 07, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, காப்பீட்டு வசதிகளை செய்து தரக்கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரசால் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக, பி.சி.ஐ., எனப்படும், இந்திய பத்திரிகை கவுன்சில், மத்திய - மாநில
journalists, frontline corona warriors, World Association of Press Councils

புதுடில்லி :முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, காப்பீட்டு வசதிகளை செய்து தரக்கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரசால் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக, பி.சி.ஐ., எனப்படும், இந்திய பத்திரிகை கவுன்சில், மத்திய - மாநில அரசுகளுக்கு, நேற்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களை, முன்கள பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்ய முன்வந்துள்ள ஒடிசா, பீஹார் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு, நன்றி.

இந்த மாநிலங்களை போல், இதர மாநிலங்களிலும், முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, அவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை செய்துதர வேண்டும். இதர முன்கள பணியாளர்களுக்கு செய்வதுபோல், கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நிதி உதவிகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHILKUMAR S - CHENNAI,இந்தியா
07-மே-202110:17:31 IST Report Abuse
SENTHILKUMAR S இந்த வசதிகளைக்கூட செய்ய முடியாத ஏழைகளா பத்திரிகை நடத்தும் முதலாளிகள்.??
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
07-மே-202108:00:02 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தொற்றுப் பரவலுக்குக் காரணமே அவர்கள்தான்.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
07-மே-202104:55:39 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பத்திரிகையாளர் என்ற பெயரில் பணம் வசூல் தான் 99 சதம் நடக்கிறது சவுக்கு சங்கர் முதல் குண செந்தில் என்று நீளும் அதனால் pci கேட்பது மிக அதிகம் இன்றைய நிலையில் காய்கறி தானியம் விளைவிக்கும் விவசாயிக்கு முன் கள பணியாளர் பட்டியலில் இடம் வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X