முன்கள பணியாளர் பட்டியலில் பத்திரிகையாளர்களை இணையுங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'முன்கள பணியாளர் பட்டியலில் பத்திரிகையாளர்களை இணையுங்கள்'

Updated : மே 07, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி :முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, காப்பீட்டு வசதிகளை செய்து தரக்கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.நம் நாட்டில், கொரோனா வைரசால் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக, பி.சி.ஐ., எனப்படும், இந்திய பத்திரிகை கவுன்சில், மத்திய - மாநில
journalists, frontline corona warriors, World Association of Press Councils

புதுடில்லி :முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, காப்பீட்டு வசதிகளை செய்து தரக்கோரி, மத்திய - மாநில அரசுகளுக்கு, இந்திய பத்திரிகை கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரசால் மோசமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் நலனுக்காக, பி.சி.ஐ., எனப்படும், இந்திய பத்திரிகை கவுன்சில், மத்திய - மாநில அரசுகளுக்கு, நேற்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களை, முன்கள பணியாளர்களாக கருதி, அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்ய முன்வந்துள்ள ஒடிசா, பீஹார் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு, நன்றி.

இந்த மாநிலங்களை போல், இதர மாநிலங்களிலும், முன்கள பணியாளர்களின் பட்டியலில், பத்திரிகையாளர்களை இணைத்து, அவர்களுக்கு காப்பீட்டு வசதிகளை செய்துதர வேண்டும். இதர முன்கள பணியாளர்களுக்கு செய்வதுபோல், கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நிதி உதவிகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X