ஸ்புட்னிக் வி ஒற்றைத் தடுப்பூசி அறிமுகம்: 80சதவீத பலனளிப்பதாக தகவல்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021
Share
Advertisement
மாஸ்கோ: கொரோனா வைரஸை கொல்லும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இரண்டு முறையாக செலுத்தப்படும் நிலையில், அதன் ஒற்றை தடுப்பூசியான 'ஸ்புட்னிக் லைட்' ரஷ்யாவில் ஒப்புதல் பெற்றுள்ளது. உலகளவில் முதன் முதலாக பதியப்பெற்ற கொரோனா தடுப்பூசி என்ற பெருமை பெற்றது ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி'. ஆரம்பத்தில் இத்தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்

மாஸ்கோ: கொரோனா வைரஸை கொல்லும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இரண்டு முறையாக செலுத்தப்படும் நிலையில், அதன் ஒற்றை தடுப்பூசியான 'ஸ்புட்னிக் லைட்' ரஷ்யாவில் ஒப்புதல் பெற்றுள்ளது.



latest tamil news



உலகளவில் முதன் முதலாக பதியப்பெற்ற கொரோனா தடுப்பூசி என்ற பெருமை பெற்றது ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி'. ஆரம்பத்தில் இத்தடுப்பூசியின் பரிசோதனைகள் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் கிளப்பின. தற்போது சுமார் 60 நாடுகளில் இத்தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிலும் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இதுவரை உலகளவில் 2 கோடி மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரபல மருத்துவ இதழான லான்செட் இத்தடுப்பூசி பாதுகாப்பானது, 90% பயனளிக்கக் கூடியது என்றது.

இந்நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரித்த காமலேயா நிறுவனம், இரண்டு தடுப்பூசிக்கு மாற்றாக ஒற்றைத் தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்தது. கடந்த டிச., 5, 2020 முதல் ஏப்., 15, 2021 வரை ரஷ்யாவில் பெரியளவில் தடுப்பூசி பெற்றவர்களின் 28 நாட்களுக்கு பிந்தைய தகவல்கள் எடுக்கப்பட்டன. அதில் 79.4% ஒற்றைத் தடுப்பூசி வேலை செய்திருப்பது தெரிய வந்தது.


latest tamil news


ஸ்புட்னிக் லைட் என்ற பெயரில் அதனை ரஷ்யாவில் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளனர். எல்லா வகை கொரோனா வைரஸையும் அது அழிப்பதாக தெரிவித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X