7 மாவட்டங்களுக்கு தலா 2 மந்திரிகள் : சபை முன்னவர் துரைமுருகன்| Dinamalar

7 மாவட்டங்களுக்கு தலா 2 மந்திரிகள் : சபை முன்னவர் துரைமுருகன்

Updated : மே 06, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (9) | |
* திருச்சி மாவட்டத்தில், கே.என்.நேரு, மகேஷ் அன்பில் பொய்யாமொழி; விருது நகர் மாவட்டத்தில், சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு; துாத்துக்குடி மாவட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன். மதுரை மாவட்டத்தில், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி; விழுப்புரம் மாவட்டத்தில், பொன்முடி, செஞ்சி மஸ்தான்; திருப்பூர் மாவட்டத்தில், மு.பெ.சாமிநாதன், கயல்விழி; புதுக்கோட்டை
 7 மாவட்டங்கள்,2 மந்திரிகள் ,சபை முன்னவர் துரைமுருகன்!


* திருச்சி மாவட்டத்தில், கே.என்.நேரு, மகேஷ் அன்பில் பொய்யாமொழி; விருது நகர் மாவட்டத்தில், சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு; துாத்துக்குடி மாவட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன். மதுரை மாவட்டத்தில், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி; விழுப்புரம் மாவட்டத்தில், பொன்முடி, செஞ்சி மஸ்தான்; திருப்பூர் மாவட்டத்தில், மு.பெ.சாமிநாதன், கயல்விழி; புதுக்கோட்டை மாவட்டத்தில், ரகுபதி, மெய்யநாதன் என, இரண்டு அமைச்சர்கள் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர்

* எம்.ஜி.ஆர்., ஆட்சியில் நெடுஞ்செழியன்; கருணாநிதி ஆட்சியில் அன்பழகன்; ஜெயலலிதா ஆட்சியில் பொன்னையன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள், நிதி அமைச்சர்களாக இருந்த போது, அவர்களிடம் தான் சட்டசபை செயலகம், கவர்னர் மாளிகை, அமைச்சரவை பணிகள் போன்ற துறைகளை இருந்தன. அதனால், அவர்களே சட்டசபை முன்னவராக செயல்பட்டனர். தற்போது, நிதி அமைச்சரான பழனிவேல் தியாகராஜனிடமிருந்து, சட்டசபை செயலகம், கவர்னர் மாளிகை, அமைச்சரவை பணிகள் போன்ற துறைகளை பிரித்து, நீர் பாசனத்துறை அமைச்சரான துரைமுருகனிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் இருந்தாலும், சபை முன்னவராக துரைமுருகன்
செயல்படுவார்.

* தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகனை தோற்கடித்த, தாராபுரம் தொகுதி பெண் எம்.எல்.ஏ., கயல்விழி செல்வராஜுக்கு ஆதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

* கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை. ஆனால், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்களான கீதா ஜீவன், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது

* கொரோனா பரவல் முதல் அலையில், சென்னையில் பம்பரமாக சுழன்று, நிவாரணங்களை வழங்கி சிறப்பாக பணியாற்றிய, சென்னை தெற்கு மாவட்ட செயலர் மா.சுப்பிரமணியத்திற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுஉள்ளது

* அடிக்கடி, சபரிமலை அய்யப்பன் கோவில், பழநி முருகன் கோவில், திருப்பதி என, ஆன்மிக பயணம் செய்து, கோவில் கோவிலாக தரிசனம் செய்து வந்த, சென்னை கிழக்கு மாவட்ட செயலர் சேகர்பாபுவுக்கு, அறநிலையத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

* தி.மு.க., வெற்றிக்கு காரணமான மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களுக்கு, குன்னம் சிவசங்கர், கடலுார் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திட்டக்குடி கணேசன் போன்றவர்களுக்கும், அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது

* அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும், ஸ்டாலின் விசுவாசிகள். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், எம்.எல்.ஏ., பிரதிநிதித்துவம் இல்லாத, கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செயல்பட உள்ளார்

* தி.மு.க., வெற்றிக்கு கைகொடுத்த முக்குலத்தோருக்கு, 4; கொங்கு வெள்ளாளர் கவுண்டர், 4; வன்னியருக்கு, 3; ஆதி திராவிடர், 3; நாடார், 3; நாயுடு, 3; யாதவர், 2; ரெட்டியார், 2; முஸ்லிம், 2; உடையார், முதலியார், மீனவர், செட்டியார், முத்தரையர், அருந்ததியர், படுகர் போன்ற சமுதாயத்திற்கு, தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

* எந்த தொகுதியிலும் வெற்றி பெறாததால், அமைச்சர் யாரும் இல்லாத மாவட்டமாக கோவை மாறியது

* ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள, 34 பேரில், 15 பேர் புதுமுகங்கள்; 18 பேர், முன்னாள் அமைச்சர்கள். இதில், 2006ம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., ஆட்சியில் இருந்த, 13 பேர் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த முத்துசாமி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி ஆகிய ஐவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X