அமைச்சகங்கள் பெயர் மாற்றம் ஏன்?

Updated : மே 08, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை :தமிழகத்தில், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பதற்கு, முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், இன்றுள்ள சூழலில், மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும்
அமைச்சகங்கள், பெயர், மாற்றம்

சென்னை :தமிழகத்தில், அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பதற்கு, முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், இன்றுள்ள சூழலில், மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில் வைத்து, சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும், தொலைநோக்குப் பார்வையோடு, மாற்றி அமைக்க வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

*தமிழகத்தின், நீர் தேவையை நிறைவு செய்வதற்காக உண்டாக்கப்படும் தனி அமைச்சகம், 'நீர் வளத்துறை' என்று அழைக்கப்படும். இத்துறை, தமிழகத்தில் தடையின்றி, உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர் நிலைகளை துார் வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், முக்கிய துறையாக செயல்படும். மற்ற துறைகளை ஒருங்கிணைக்கும் மையப் புள்ளியாக, இது இருக்கும்

*வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம், 'வேளாண்மை -உழவர் நலத் துறை' என்று, பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம், சாகுபடியை பெருக்குவது மட்டும் அல்ல. உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக, இத்துறை செயல்படும்

*சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம், 'சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை' என்று மாற்றப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய, சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும், இந்த அமைச்சகம் செயல்படுத்தும்

*மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது, மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும், அத்துறைக்கு பரந்துபட்ட நோக்கத்தில், 'மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை' என்று, பெயர் சூட்டப்படுகிறது

*மீனவர்கள் நலமில்லாமல், மீன்வளத்தை பெருக்கி பயனில்லை. எனவே, மீனவர் நல வாழ்விற்கான, திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், 'மீன்வளம் -மீனவர் நலத்துறை' என்று அழைக்கப்படும்

*தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள், காலப்போக்கில் மாறி, இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை, உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே, 'தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை' என்று பெயரிடப்படுகிறது

*செய்தி மக்கள் தொடர்புத்துறை, 'செய்தித் துறையாக' உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே, அத்துறையின் செயல்பாடாக, மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது

*சமூக நலத்துறை என்பது, பெண்களுக்கு உரிமை வழங்குகிறது. பல்வேறு செயல்பாடு களை உள்ளடக்கிய துறை. எனவே, அதை குறிக்கும் பொருட்டும், 'சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை' என்று அழைக்கப்பட உள்ளது

*பணியாளர் என்கிற பதம், இன்று மேலாண் வட்டத்தில், அவர்களை பாரமாகக் கருதும் போக்கை சுட்டிக்காட்டுவதால், மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, 'மனிதவள மேலாண்மைத் துறை' என்று, அழைக்கப்பட உள்ளது

* வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை, 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று பெயர் மாற்றம் அடைகிறது. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல், செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களை, திட்டங்களாகக் கொண்டு செயல்படத் துாண்டுகோல்களாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

துறைகள் தனித்தனியாக பிரிப்பு!

பொதுப்பணி துறையில், கட்டடம் மற்றும் நீர்ப் பாசனத் துறைகள் இருந்தன. தற்போது, நீர்ப் பாசனம் தனியாக பிரிக்கப்பட்டு, அந்த துறை அமைச்சராக, துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுப்பணித்துறை அமைச்சராக, வேலு நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர், நெடுஞ்சாலை துறையையும் கவனிப்பார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். செய்தித் துறையுடன் இருந்த தமிழ் பண்பாட்டுத் துறை, தொல்பொருள் துறை பிரிக்கப்பட்டு, தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி துறை அமைச்சரிடம், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இருப்பது வழக்கம். இது, இரு அமைச்சகமாக பிரிக்கப்பட்டு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக, கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக, பெரியகருப்பன் நியமிக்கப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., ஆட்சியில், கால்நடை துறைக்கு தனி அமைச்சர் இருந்தார். தற்போது, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், கால்நடைத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி துறையை கவனிக்கும் அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை கவனிப்பது வழக்கம். இம்முறை அந்த துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
07-மே-202119:21:49 IST Report Abuse
sankar ஏதாவது வாஸ்து பிரச்சினையா இருக்கும்
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-மே-202118:05:21 IST Report Abuse
Poongavoor Raghupathy திமுக எதிர் கட்சியாக ஆளும் கட்சியை கேள்வி கேட்பதில் புத்திசாலிகள். திமுகவால் வேலை செய்து முன்னேற்றம் காண்பது கடினம். வேலைக்கு திமுக லாயக்கில்லை. கேள்வி கேட்டு குடைச்சல் தரும் கட்சி திமுக. திமுகவினால் தமிழ்நாடு முன்னேறுவது நடக்காத காரியம். மக்கள் வோட்டை தவறான கட்சிக்கு போட்டு விட்டு தவிக்க போவது உறுதி.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
07-மே-202116:39:47 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி... இங்கே வரும் உடன்பிறப்புகள் பலரும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொடுத்ததை ஆஹா, ஓஹோ, என்று புகழ்கிறார்கள். அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படவேண்டும். இப்போது என்ன நடக்கும், அரசு பேருந்து நிறுவனங்கள் இன்னமும் நஷ்டத்தில் இயங்கும். இப்போது இருக்கும் 5000 கோடிகள் கடன்கள் 6000 கோடிகளாக மாறும். அதுவும் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்தே சரிசெய்யபடும். இப்படியே ஆகி ஒரு கட்டத்தில் அரசு பேருந்து நிறுவனங்களை அரசு நடத்த முடியாமல் கடன் 20000 கோடிகளை நெருங்கும். அப்போது வேறு வழியே இல்லாமல் அரசு பேருந்து நிறுவனத்தை கலைத்துவிட்டு தனியாருக்கு விற்பதற்கு பேரம் நடக்கும். ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குவதற்கும், அது பிற்காலத்தில் தனியாருக்கு தாரைவார்க்கப் படுவதற்கும் இதுதான் காரணம். இதுதெரியாமல் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் கூவுறானுங்க. ஹி...ஹி...ஹி....4000 ரூபாயில் 3000 ரூபாய் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பான ஆலைகள் வைத்திருக்கும் முக்கிய திருட்டு திமுகவினர் பாக்கெட்டுகளுக்கு செல்லும். இதுதான் உங்களுக்கு தெரியாமல் உங்கள் பணத்தை விஞ்ஞான முறையில் ஆட்டையை போடுவது. அரசு கொடுக்கும் 8000 கோடிகளில் 6000 கோடிகள் மதுபான அதிபர்களாக இருக்கும் ஜெகத் ரட்சகன், கனிமொழி, டி ஆர் பாலு போன்ற முக்கிய தலைவர்களின் வீட்டு சொத்தாக மாறும். இதுகூட தெரியாமல் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி உடன்பிறப்புகள் சந்தோசம் போங்க கூவுறாங்க. ஹி...ஹி...ஹி....திருட்டு திமுகவின் தந்திரமே தெரியாமல் இருக்கிறீர்களே. சுடலை சொன்ன எல்லா இலவச அறிவிப்புகளும் 20000 கோடிகள் செலவாகும். அத்தனையும் சுடலை சம்பாதித்து கொடுக்கப்போவதில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும். மறைமுக வரிவசூல் நடக்கும். அவ்வளவே. 20000 கோடிகளை இலவசமாக கொடுத்து விட்டு திருட்டு திமுகவினர் 2 லட்சம் கோடிகளை விஞ்ஞான முறையில் ஆட்டையை போட்டு சொத்து சேர்ப்பார்கள். இளிச்சவாய மக்களும் இலவசம் கிடைக்கிறதே என்று ஊழல்களில் திளைக்கும் அரசியல்வாதிகளையும், ஊழல்களில் திளைக்கும் அதிகாரிகளையும் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தின் தற்போதைய கடன் 5 லட்சம் கோடிகள். அது திருட்டு திமுக ஆட்சி முடியும்போது 8 லட்சம் கோடிகளாக இருக்கும். இதெல்லாம் எதிர்காலத்தில் இளம் தலைமுறை தலையில் விடியும். அப்போது அரசாங்கம் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் நிலங்களை, சொத்துக்களை அரசுடைமை யாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் கிரீஸ் நாட்டுக்கு நடந்தது. அந்நாடு இலவசங்களாலேயே அழிந்தது. கூடிய விரையில் இது தமிழ்நாட்டுக்கும் நடக்கும். பொறுத்திருக்கவும். ஹி...ஹி...ஹி...திருட்டு திமுகவின் தலீவர் கட்டுமரம் கருணாநிதி ஆரம்பித்து வைத்த இலவசங்கள் என்னும் செயல்களினாலேயே இப்போது கடன் இவ்வளவு வந்திருக்கிறது. அவர்தான் டிவி கொடுக்கிறேன் என்று ஆரம்பித்து வைத்தார். அதன் பலன் எல்லா கட்சிகளும் அதை பின்பற்றி 5 லட்சம் கோடிகளாக உருமாறி இருக்கிறது. ஏதேனும் சொத்து பத்து, நகைகள், காலிமனைகள் வைத்திருந்தால் பத்திரகமாக வைத்திருக்கவும். உங்கள் பேரன், பேத்திகள் காலத்தில் கடன் தொகைகளுக்காக அரசுடைமையாகினால் என்ன செய்வீர்கள் பாவம். கோர்ட்டிலும் உங்கள் கேஸ் எடுபடாது.... ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X