அரசியல் செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்கு பின் குமரியில் இருந்து பா.ஜ., பிரதிநிதி

Updated : மே 07, 2021 | Added : மே 06, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
நாகர்கோவில்:கிட்டத்தட்ட, 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோட்டைக்கு, பா.ஜ., பிரதிநிதி செல்வது, மாவட்ட பா.ஜ.,வினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் சுரேஷ்ராஜன். 1996 முதல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வந்த இவர், கடந்த தேர்த லில், நாகர்கோவிலில் போட்டியிட்டு, வெற்றி
 25 ஆண்டுகளுக்கு பின் குமரியில் இருந்து பா.ஜ., பிரதிநிதி

நாகர்கோவில்:கிட்டத்தட்ட, 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை கோட்டைக்கு, பா.ஜ., பிரதிநிதி செல்வது, மாவட்ட பா.ஜ.,வினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் சுரேஷ்ராஜன். 1996 முதல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வந்த இவர், கடந்த தேர்த லில், நாகர்கோவிலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறும் கனவுடன், இந்த தேர்தலிலும், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டார்.ஆனால், பா.ஜ.,வின் எம்.ஆர்.காந்தி, 11 ஆயிரத்து, 669 ஓட்டுகள் வித்தியாசத்தில், இவரை தோற்கடித்து, சுரேஷ்ராஜனின் அமைச்சர் கனவை கலைத்தார்.


யார் இந்த காந்தி?

பா.ஜ.,வின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் குமரி மாவட்ட தலைவராக, 1967-ம் ஆண்டே பொறுப்பு வகித்தவர். 1975-ல் மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர். ஜனசங்கம் பா.ஜ.,-வாக மாறியபோது, 1980-ல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றவர்.ஹிந்துக்களுக்கு, கோவில்களுக்கு பிரச்னை என்றால், அங்கு முதல் ஆளாக நிற்பார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய வழிபாடான கடல் குளிக்கும் சடங்கை தடை செய்த போது, தனி ஆளாக கடல் குளிக்க சென்று கைதானார். பல முறை, இவரை கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது.

பண பலமோ, அதிகார பலமோ கொண்டவர் அல்ல. பொது வாழ்வுக்காக திருமணம் செய்து கொள்ளாமல் பணியாற்றுபவர். சொந்தமாக வீடு இல்லை. காலில் செருப்பு கிடையாது. வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா இவரது, 'டிரேடு மார்க்.'

பா.ஜ.,வில், பொன். ராதாகிருஷ்ணனுக்கு சீனியர். 2001-ல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆனார். நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளில் ஆறு முறை தோல்வியடைந்து, ஏழாவது முறை வெற்றி பெற்றிருக்கிறார்.'இயக்கப் பணிக்காக வாழ்பவர், மிகவும் எளிமை யான மனிதர், மூத்த தலைவர்' என்ற அனுதாப அலை, தொகுதியில் கடுமையாக வீசியது. ஹிந்துக்களில் பலரும், தங்கள் கட்சிகளை மறந்து, நேரடியாக களப்பணியில் இறங்கினர்.


பத்மனாபபுரம்

இந்த தொகுதியில் ஏற்பட்ட ஹிந்து ஒருங்கிணைப்பு, எம்.ஆர்.காந்தி வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்தது.கடந்த, 1984ல் பத்மனாபபுரம் தொகுதியில், ஹிந்து முன்னணி பிரதிநிதியாக, பாலச்சந்தர் சட்ட சபை சென்றார். 1996ல், அதே தொகுதியில் வேலாயுதன், பா.ஜ., சார்பில் வெற்றி பெற்று சட்டசபை சென்றார்.

தற்போது, 25 ஆண்டு களுக்கு பின், குமரி மாவட்ட பா.ஜ., பிரதிநிதி செல்வதில், அதுவும் எம்.ஆர்.காந்தி செல்வதில், பா.ஜ.,வினர் பூரித்து போயுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202115:54:42 IST Report Abuse
Malick Raja அம்மாம்.. ஆமாம் .. இந்த வெற்றியால் சென்னை கோட்டையை பிடிக்கலாம் என்று நினைப்பது புளியங்கொட்டைக்கு கூட உதவாது ..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-மே-202113:26:44 IST Report Abuse
M  Ramachandran இது போல் எல்ல இந்துக்களும் ஒன்றாக வரவேண்டும் என்ற ஆசை நிறை வேறாது. ஏன் என்றால் இஙகு உள்ளது கருணாதி சொல்வாரே சோற்றால்( பணத்திற்கு மயங்கிய ) அடித்த பிண்டங்கள்.அது தான்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
08-மே-202113:22:48 IST Report Abuse
M  Ramachandran இவர் வெகு ஜன விரும்பி கட்சிக்கு ஆப்பிளும் நல்ல பெயருடன் சமூக பணிகள் செய்ததால் மக்களே விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X