இந்தியாவின் கொரோனா நிலை; ஐ.நா., அமைப்பு எச்சரிக்கை

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
நியூயார்க்: 'இந்தியாவின் தொற்று நிலை, நம் அனைவருக்கும் அடித்த எச்சரிக்கை மணி' என, யூனிசெப் எனப்படும், ஐ,நா., சர்வதேச குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து, யூனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரியாட்டா போர் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்க பட்டு உள்ளது. இந்த சோகமான நிலை, நம் அனைவருக்கும் அடிக்கப்பட்டுள்ள
India Fights Corona, Keep India Safe, United Nations,இந்தியா,ஐநா

நியூயார்க்: 'இந்தியாவின் தொற்று நிலை, நம் அனைவருக்கும் அடித்த எச்சரிக்கை மணி' என, யூனிசெப் எனப்படும், ஐ,நா., சர்வதேச குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து, யூனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரியாட்டா போர் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்க பட்டு உள்ளது. இந்த சோகமான நிலை, நம் அனைவருக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. இந்நேரத்தில், இந்தியாவுக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், உலகில், வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்.

யூனிசெப் சார்பில், இந்தியாவுக்கு வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் பல சாதனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. தெற்காசியாவின் பல நாடுகளிலும், வைரஸ் தொற்று அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதை தடுப்பதற்கு, உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsயு.எஸ்.ஐ.பி.சி., எனப்படும், அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையின் பரவலால், இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலை மோசமானால், உலகத்தின் நிலையும் மோசமாகி விடும்.

அதனால், இந்தியாவுக்கு, இந்த நெருக்கடியான நேரத்தில், உலகநாடுகள் உதவி செய்ய வேண்டும். அமெரிக்காவைச் சேர்ந்த, 40 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இணைந்து, சிறப்பு குழு ஒன்றை அமைத்து, ஏராளமான மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இந்தியாவை ஆட்டி படைக்கும் கொரானாவிற்கு இணையான அரசியல் விளையாட்டும் உணர்ச்சிவசப்படும் நீதிமன்றங்களும் விலை போன மீடியாக்களும் மக்களை அதிகளவில் கொல்லுகின்றன ..
Rate this:
Cancel
07-மே-202110:28:00 IST Report Abuse
Radhakrishnan Radhakrishnan சீனா இதுபோன்ற வைரஸ்களை உருவாகாமல் இருக்க அவனை என்னசெய்யலாம் என்று யோசியுங்கள் ?இப்படி செய்தால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கும் !
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
07-மே-202109:05:49 IST Report Abuse
GMM இந்தியாவில் மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநில கட்சிகள் போட்டி காரணமாக ஒத்துழைப்பது இல்லை. உலக நாடுகள் கவலைப்படுவது போல் எதிர் கட்சிகள் கவலை பட மாட்டார்கள். அனைத்து மாநில அரசுகள் உடன் கலைக்கப்பட வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தி, ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து நோய் பரவல் நிற்கும் வரை அமுலில் இருக்க வேண்டும். மத்திய அரசு மக்கள் பிரதிநிதியாக இயங்க வேண்டும். இல்லாவிடில், இறப்பின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். அண்டை நாடுகளுக்கும் பரவும். பாதிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X