பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: காலம் பதில் சொல்லும்!

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய அரசு பதவியேற்று, ஆறு மாதங்கள் கழித்து தான், அதன் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்குள், அவசரப்படக் கூடாது. முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினின் முதல் கடமை, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தான். அதற்கான
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதிய அரசு பதவியேற்று, ஆறு மாதங்கள் கழித்து தான், அதன் செயல்பாடு குறித்து விமர்சனம் செய்ய வேண்டும்; அதற்குள், அவசரப்படக் கூடாது. முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினின் முதல் கடமை, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தான். அதற்கான ஏற்பாடு குறித்து, பதவியேற்கும் முன்பே அவர், அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதன் வழியாக அவர், கொரோனா விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார் என்பது புரிகிறது.

தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டதேர்தல் வாக்குறுதிகளையும், அவர் ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, 'பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் மீது, 100 நாட்களில் நடவடிக்கை எடுப்பேன்' என, அவர் உறுதிமொழி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட வேண்டும். கடந்த முறை, தி.மு.க., ஆட்சியின்போது, மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. எனவே, இம்முறை அந்த பிரச்னை எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை, ஸ்டாலினுக்கு இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., ஆகியோர் வாழ்த்து தெரிவித்ததும், அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்ததும், நாகரிக அரசியலுக்கு நல்ல ஆரம்பம். பா.ஜ., வேறு; மத்திய அரசு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுடன் இணக்கத்தைக் கடைபிடித்தால், தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். மத்திய அரசும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக் கூடாது. தி.மு.க., அரசின் முன், நிறைய சவால்கள் காத்திருக்கினன்றன.


latest tamil news



தமிழக அரசின் கடன் சுமையை குறைத்தல்; வேலைவாய்ப்பு அதிகப்படுத்துதல்; மதுவிலக்கை நோக்கி பயணப்படுதல்; பாலியல் குற்றம் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல் மற்றும் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். பேரிடரை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்திற்கு, தி.மு.க., அரசு உத்தர வாதம் அளிக்கும் விதமாக, அரசு நிர்வாகத்தில், அரசியல்வாதிகள் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் தலைமையில், தமிழகம் வீறு நடை போடுமா? காலம் பதில் சொல்லும்!

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிவ.இளங்கோவன் . - முதல்வன் ஸ்டாலின் ,இந்தியா
08-மே-202102:32:03 IST Report Abuse
சிவ.இளங்கோவன் . இன்னும் கொஞ்சம் காலம் வாசகர்களில் பலர் கதறிக்கொண்டேதான் இருக்க வேண்டும் .. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சியை தரப்போகின்றார் தமிழக முதல்வர் ..
Rate this:
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கொஞ்சகாலம் மட்டுமே .. சிறப்பான ஆட்சி .. சரியாக சொன்னீர்கள் .. தெரிந்தோ தெரியாமலோ...
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
07-மே-202120:16:13 IST Report Abuse
Truth Triumph இன்று கருப்பு தினம் என்று வேதனைப்பட்டார் நண்பர் ...இதுபோன்ற நம்பிக்கை தரும் செய்திகள் செயல் வடிவம் பெறவேண்டும்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
07-மே-202119:29:01 IST Report Abuse
bal முட்டி மோதிக்கொள்வது தான் பழக்கம்...படிக்காதவன் பதவிக்கு வரும்போது படித்த கலெக்டர்ஸ், போலீஸ் மற்றும் செயலர்கள் அடிமையாகதான் இருக்கிறார்கள்... தம்மால் ஒன்றும் தின்னிச்சையாக செய்ய முடியாது...கொரோன பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்..கட்டுப்படுத்த..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X