பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர் வருகை; 50 சதவீதமாக்க அறிவுரை

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: வங்கிகளில் ஊழியர்கள் வருகையை, 50 சதவீதமாக குறைக்க, உறுப்பினர் வங்கிகளுக்கு, தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக, அந்தக்குழுமம் அனுப்பிய சுற்றறிக்கை: கொரோனா பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர, தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, 19ம் தேதி வரை, வங்கிக் கிளைகள், மண்டல அலுவலகங்கள்
banks, corona virus, covid 19

சென்னை: வங்கிகளில் ஊழியர்கள் வருகையை, 50 சதவீதமாக குறைக்க, உறுப்பினர் வங்கிகளுக்கு, தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக, அந்தக்குழுமம் அனுப்பிய சுற்றறிக்கை: கொரோனா பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர, தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதன்படி, 19ம் தேதி வரை, வங்கிக் கிளைகள், மண்டல அலுவலகங்கள் உட்பட, இதர அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.


latest tamil newsமாற்றுத்திறனாளி ஊழியர்கள், பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியாளர்கள் குழுமம் ஏற்கனவே அறிவுறுத்திய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, அடுத்த அறிவிப்பு வரும் வரை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRISHNSWAMY MADIVANAN - Chennai,இந்தியா
07-மே-202108:22:28 IST Report Abuse
KRISHNSWAMY MADIVANAN வங்கிகள் மதியம் இரண்டு மணி வரை தான் செயல்படுகிறது எனவே அவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. மேலும் அவர்களுக்கு சலுகை கொடுக்க கூடாது.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
07-மே-202106:55:47 IST Report Abuse
Rajarajan பொதுமக்கள் சேவைக்காக அரசு நிறுவனங்கள் என்ற நிலைமை மாறி, அரசு ஊழியருக்காக பொதுமக்கள் என்று மாறிவிட்டது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், எல்லோருக்குமே பொதுவான, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மூட்டு வலி என்பது தற்போது அழையா விருந்தாளி ஆகிவிட்டது. இதிலிருந்து தப்பிப்பது கடினம். ஆனால், இவற்றை சரிசெய்துகொள்ள மற்றும் தற்காத்துக்கொள்ள வழிகள் உள்ளன. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, குறிப்பிட்ட வயதுக்குமேல் அரசு ஊழியருக்கு வேலைக்கு வருவதிலிருந்து விடுமுறை அளிக்கவேண்டும் என்பது, மிக மிக கேவலமான செயல். இந்த வயதிலிருப்பிக்கும் அரசு ஓட்டுநர், நடத்துனர், செவிலியர், மருத்துவர், இதர மருத்துவமனை ஊழியர் மற்றும் அரசு ஊழியர் / ஆசிரியர் அனைவரும் இப்படி வராவிட்டால், பொதுமக்களின் / அடுத்த தலைமுறையின் / பொருளாதாரத்தின் / நாட்டின் வளர்ச்சியின் நிலை என்ன ?? இந்த லட்சணத்தில், இவர்களின் பனி ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இவர்கள் 55 - 60 வயதான, 5 வருடங்கள் வேலைக்கு வரவேண்டாமா ?? அல்லது வந்து சும்மா அமர்ந்து ஓய்வு எடுப்பாரா ?? இவர்களின் வேலையே யார் செய்வர் ?? எனவே, 55 வயதிற்கு மேல் பனி புரியும் அரசு ஊழியர்கள், உடல்நிலை கருத்தில்கொண்டு, அவர்கள் தானாகவே விருப்ப ஓய்வு பெறுவதே சரியாக இருக்கும். இன்னும் சொல்ல போனால், 50+ வயது ஊழியருக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவதே சரி. (தனியார் நிறுவனத்தில் இவற்றை காரணம் காட்டி வேலைக்கு வராமல் இருக்க முடியுமா ?? ) இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும். பெரும்பாலான அரசு துறைகளை ஒழித்து, இருக்கும் சிலவற்றையும் கணினி மயமாக்கவேண்டும். தேவையற்ற செலவினங்களை குறைப்பதே, தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். இல்லையேல், பெட்ரோல், டீசல் விலை மற்றும் இதனால் விலைவாசி ஏறிவிட்டதாக புலம்புவது, வெறும் அரசியல் நாடகம் மட்டுமே. மேற்சொன்ன செயல்கள் மற்றும் வரப்போகும் அடுத்த சம்பள கமிஷன் போன்றவை, இன்னும் பொதுமக்கள் தலையில் கூடுதல் சுமை வைக்கும். நேரிடை மற்றும் மறைமுக வரி செலுத்தும், தனியார் ஊழியர் மனசாட்சிக்கு தான் இந்த பதிவு.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
07-மே-202105:49:32 IST Report Abuse
Nalam Virumbi வம்பு பேசுவதைக் குறைக்கலாம். 100% வந்தாலே மந்தமான வேலை. 50% சதவிகிதம்.... கேட்கவே வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X