அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு: உத்தரவு பிறப்பிப்பாரா ஸ்டாலின்?

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கையை மீறி போய், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், நோயாளிகள் அல்லாடி வரும் நிலை தொடர்கிறது. திடீர் இறப்புகளும் அதிகரிப்பதால், முதல்வராக இன்று பொறுப்பேற்கும் ஸ்டாலின், 20ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுதும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத வகையில், தினமும் அதிகரித்தபடி
lockdown CM Stalin, Stalin, DMK, Tamil Nadu

சென்னை: தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் கையை மீறி போய், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், நோயாளிகள் அல்லாடி வரும் நிலை தொடர்கிறது. திடீர் இறப்புகளும் அதிகரிப்பதால், முதல்வராக இன்று பொறுப்பேற்கும் ஸ்டாலின், 20ம் தேதி வரை, முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாத வகையில், தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதுவரை இல்லாத அளவாக, தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 23 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தை தொட்டபடி உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட, 1.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் முதல் அலையின் போது, தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டோரை, '108' ஆம்புலன்சில் அழைத்து சென்று, மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், நோய் தொற்று பாதிப்பு குறைவாக இருந்தால், கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பினர். பாதிப்பு அதிகம் உள்ளோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர்.

தற்போது, கொரோனா பாதிப்பு உறுதியானாலும், சுகாதார துறையினர் யாரும் தேடி வருவதில்லை. பாதிக்கப்பட்டோரை, உறவினர்களே மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. அங்கும் பல மணி நேரம் காத்திருப்பு தான்.நோயாளிகளுடன், பாதிப்பு இல்லாதோரும் காத்துக் கிடப்பதால், அவர்களுக்கும் நோய் பரவுகிறது. அதன் வாயிலாக, அடுத்தடுத்து பலருக்கும் பரவி விடுகிறது. இது குறித்து யாரும் கவலைப்படவில்லை.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர், நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை. ஒரு மருத்துவமனையில் மனைவி இறந்ததை, மற்றொரு மருத்துவமனையில் உள்ள கணவனால் அறிய முடியவில்லை. இதுபோல, தினமும் ஏராளமான பரிதாபங்கள் அரங்கேறி வருகின்றன. நோயால் பாதிக்கப்படுவோருக்கு, மருத்துவமனைகளில், 'பெட்' கிடைப்பதில்லை. அரசு அதிகாரிகளோ, 'பெட்' காலியாக உள்ளது எனக் கூறினாலும், சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில், எங்கும் இடம் கிடைப்பதில்லை; 'இங்கு ஹவுஸ்புல்; வேறு மருத்துவமனை பாருங்கள்' என, விரட்டும் நிலை தான் உள்ளது.


latest tamil newsஎப்படியாவது, 'பெட்' கிடைக்காதா என, மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக நிற்க, ஆம்புலன்சுகளில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மூச்சுத்திணறலுடன் நோயாளிகள் தவம் கிடக்கின்றனர். ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் இதே நிலை தான் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில், எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை; படுக்கை உள்ளதா என்று, கேட்போரும் ஏராளமாக உள்ளனர். சென்னை மட்டுமல்ல; சிறு நகரங்களிலும் இதே நிலை தான். கிராமங்களிலும் கொரோனா பாதிப்பு மிரள வைக்கிறது. போர்க்கால அடிப்படையில், சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், கூடுதல் படுக்கை வசதிகள்; தற்காலிக மருத்துவமனைகள்; கொரோனா பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது; அதை சரிசெய்ய வேண்டும். சில மருத்துவர்கள் ஆக்சிஜன் தொடர்ச்சியாக கிடைத்தால், தற்காலிக மருத்துவமனைகளை நடத்த தயாராக உள்ளனர். அதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். 'ரெம்டெசிவிர்' மருந்துக்காக நாள் கணக்கில் மக்கள் காத்துக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. மாவட்டங்களிலும் மருந்து விற்பனை மையத்தை அரசு துவக்குவது கட்டாய தேவை.

இவை அனைத்திற்கும் மேலாக, நோய் பரவலை தடுக்க, முழு ஊரடங்கு அவசியம். வரும், 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் சேர்த்து, 20ம் தேதி வரை, முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, மருத்துவ நிபுணர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். மிகவும் அபாயகரமான நிலையை நோக்கி, மாநிலம் சென்று கொண்டிருக்கையில், அவசரகால நடவடிக்கைகள் அவசியம். தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின், மக்களை காப்பது தான் முக்கிய பணி என்பதை நிரூபிக்கும் வகையில், அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும். கசப்பு மருந்து தான் பலனளிக்கும் என்பதை உணர்ந்தும் மக்களும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முழு ஊரடங்கே, இப்போதைக்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி எண்ணி ஆறு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும்.... நாற்பத்தி ஐந்து (45) தி மு க எம் எல் ஏக்கள் ஸ்லீப்பர் செல் தயார்... என்ன மாறா, பாலு, துரை, ராசா.... கவனம்... நேரம் வரும்போது.... டபக்குன்னு..... ஆமா சொல்லீட்டேன்...
Rate this:
Gopinathan S - chennai,இந்தியா
07-மே-202112:13:52 IST Report Abuse
Gopinathan Sபூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருந்து விட்டது என்று நினைத்த கதைதான்........
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
07-மே-202110:25:41 IST Report Abuse
RajanRajan முழு ஊரடங்கா. டப்பா டான்ஸ் ஆடிடுமே. எதிர்கட்சியா இருந்து முழங்கினதெல்லாம் சேர்த்து இப்போ டாஸ்மாக் வேலை செய்யும் சுடலை.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
07-மே-202110:23:59 IST Report Abuse
ram இனிமேல் யாரும் எதுவும் கேள்வி கேள்வி கேட்டிர்கள் நடப்பதே வேற
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X