வெற்றிக்கு பினராயி விஜயன் மட்டும் காரணமல்ல: மார்க்சிஸ்ட்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: கேரளாவில் 140 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'மக்கள் ஜனநாயகம்' வார இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில் இரண்டாவது முறையாக மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
Pinarayi Vijayan, Kerala CM, Marxist

புதுடில்லி: கேரளாவில் 140 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'மக்கள் ஜனநாயகம்' வார இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளாவில் இரண்டாவது முறையாக மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பினராயி விஜயன் என்ற ஆளுமையால் மட்டுமே கிடைத்ததாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.


latest tamil news


ஒரு வலுவான மற்றும் தன்னிகரற்ற தலைவராக உருவெடுத்துள்ள பினராயி விஜயனால் தான் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றதாக கூறி வருகின்றன. அந்த ஒரு நபர் தான் அரசிலும் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவதாக கூறுகின்றன. மக்கள் நலனுக்காக உழைக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தன் நிர்வாக திறமையால் கொள்கைகளை எளிதில் அமல்படுத்தக்கூடிய திறனுடையவர். எனினும் பினராயி விஜயன் என்ற தனிநபர் மட்டுமே இந்த வெற்றிக்கு காரணமென கூறக் கூடாது. தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சியின் பலனாக கிடைத்த வெற்றி இது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-மே-202116:25:41 IST Report Abuse
duruvasar கமல் ஹாசனின் பங்களிப்பை பற்றி ஒரு வார்த்தை போட்டிருக்கலாம். . நல்ல மனுஷன். பினராய் , பினாரையேனு எத்தனை தடவை சொன்னாருன்னு அவருக்கே தெரியாது.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
07-மே-202113:19:53 IST Report Abuse
Mithun அக்பர் ஹிந்து பெண்களை மணந்து சமத்துவத்தை நிலைநாட்டினார் என்று பெருமையுடன் பள்ளிகளில் படிக்கும் முட்டாள்கள் உள்ளவரை அவர்கள் நினைத்ததை சாதிக்கமுடியும்.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
07-மே-202113:10:22 IST Report Abuse
Mithun மொத்தத்தில் கேரளாவில் பாப்புலர் பிரண்ட்டும், SDPI கட்சியும் சேர்ந்து மார்க்சிஸ்ட்டின் முகமூடியை அணிந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். பினராய் ஒரு பொம்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X