பொது செய்தி

தமிழ்நாடு

விஜயபாஸ்கர், பொன்.ராதாவுக்கு கொரோனா

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக, விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்
Vijayabaskar, Pon Radhakrishnan, Corona Virus, Covid 19

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக, விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


latest tamil newsமுன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 69, கொரோனா பாதிப்பால், மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை வந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சிறப்பு வார்டில் சேர்க்கப் பட்டார். அவர், ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார். 'டுவிட்டரில்' அவர், 'லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் நலம் பெற்று திரும்புவேன்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-மே-202114:54:17 IST Report Abuse
Malick Raja அணைத்து மனிதர்களுக்கும் பொதுவானது நோய்த்தொற்று . யாராக இருந்தாலும் உரியதை உரிய நேரத்தில் பெற்றே ஆகவேண்டும் .. விதிவிலக்கெல்லாம் இருக்காது .. இருப்பினும் பிணிநீங்கி மகிழ்ச்சி பெற வாழ்த்துவதே மனிதமாண்பு .
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
07-மே-202116:18:04 IST Report Abuse
vnatarajan இரண்டு டோஸ் தடுப்பூசிபோட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மக்கள் மனதில் தடுப்பு மருந்தை சரியான டோஸில் செலுத்த்தினார்களா என்ற சந்தேகம் வந்துவிடும். இதிலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசிபோட்டவர்களும் தங்களுக்கு நோய் வராது என்ற இறுமாப்பில் இருந்துவிடக்கூடாது. மக்களிடம் உள்ள பயத்தை போக்க ஹெல்த் டிபார்ட்மென்ட் என்ன கூறுகிறது
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
07-மே-202115:33:35 IST Report Abuse
sahayadhas இவர் ரொம்ப நல்லவர், இவர் இன மக்கள் இவரை கடவுள் போல் வழி நடத்தவர். தீய கூட்டத்தில் சேர்ந்து தனது அனைத்து இன மக்களின் அன்பை இழந்து நிற்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X