அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது மூன்றாவது பெரிய கட்சி? சீமானுடன் முட்டி மோதும் அழகிரி!

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில், யாருக்கு மூன்றாவது இடம் என்ற விவகாரத்தில், தமிழக காங்கிரசுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.சட்டசபை தேர்தலுக்கு முந்தைய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும், தி.மு.க., 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணி, 159 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி, 75 தொகுதிகளிலும்
seeman, KS Alagiri, Naam Tamilar, Congress

சென்னை: சட்டசபை தேர்தலில், யாருக்கு மூன்றாவது இடம் என்ற விவகாரத்தில், தமிழக காங்கிரசுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு முந்தைய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும், தி.மு.க., 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணி, 159 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி, 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியிடம், 5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், 15 தொகுதிகளை, தி.மு.க., பறி கொடுத்தது. 10 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில், 10 தொகுதிகளை இழந்துள்ளது.

இந்த தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி, 10 முதல், 15 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. அந்த ஓட்டுக்கள், தி.மு.க.,விற்கு சென்றிருந்தால், அக்கட்சி கூடுதலாக, 25 முதல், 35 தொகுதிகளை பிடித்திருக்கும். இந்நிலையில், மொத்த ஓட்டு சதவீத கணக்கில், தி.மு.க., 37.70 சதவீதம்; அ.தி.மு.க., 33.29; நாம் தமிழர் கட்சி, 6.58; காங்கிரஸ், 4.27; பா.ம.க., 3.80; மக்கள் நீதி மய்யம், 2.62; பா.ஜ., 2.62; அ.ம.மு.க., 2.35 சதவீதம் பெற்றுள்ளன.

ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில், 3வது இடத்தை, நாம் தமிழர் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆனால், அக்கட்சிக்கு எம்.எல்.ஏ.,க்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதால், மூன்றாவது கட்சியாக கருத முடியாது. அதற்கான புதிய வியாக்கியானங்களை வழங்கி, தங்களை மூன்றாவது கட்சியாக அழைப்பதை, சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக காங்., தலைவர் அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news



அவரது அறிக்கை: மொத்தம், 234 தொகுதிகளில், 25 தொகுதிகளில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சி பெற்ற ஓட்டுக்கள், 20 லட்சம். ஒரு தொகுதியில், காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி ஓட்டுக்கள், 80 ஆயிரம். நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்து, 30 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. மொத்தம், 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 72 சதவீத ஆதரவுடன், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், மூன்றாவது பெரிய கட்சியா?

ஒரு தொகுதியில் சராசரியாக, 13 ஆயிரம் ஓட்டுக்களை மட்டும் வாங்கிய, நாம் தமிழர் கட்சி, மூன்றாவது பெரிய கட்சியா; காங்கிரஸ் தான், 3வது பெரிய கட்சி. புதிய வியாக்கியானங்களை வழங்கி, தங்களை மூன்றாவது பெரிய கட்சி என, அழைப்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க., முதுகில் தான் ஏறி தான், காங்கிரஸ், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு என, தனிப்பட்ட ஓட்டு வங்கி கிடையாது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளில், மூன்றாவது இடத்தை தனியாக போட்டியிட்ட, நாம் தமிழர் கட்சி பிடிக்கும் என, கூறப்பட்டதே தவிர, கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கைப்பற்றும் என, கூறவில்லை.

மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பிடிப்பது, கூட்டணியாகவோ, தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலோ அல்ல. ஓட்டு சதவீதம் கணக்கு தான், தேசிய அளவிலான அளவுகோல். மூன்றாவது இடத்தை பிடிக்க வேண்டுமானால், காங்கிரஸ், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
08-மே-202115:22:29 IST Report Abuse
madhavan rajan 25 சீட்டுக்கே அலையாய் அலைந்து பிற கட்சிகளின் தொழில் நின்று நான்கு சதவிகித வோட்டு வாங்கியவரெல்லாம் பேசுவதற்கே தகுதியில்லாதவர். துணிவிருந்தால் அடுத்தமுறை நாதக மாதிரி தனியாக எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டு பிறகு யார் மூன்றாவது இடம் என்று ஆராய்ச்சி செய். தடியில்லாம நிக்கவே தெம்பில்லாதவன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கிட்டவன்கூட போட்டிபோடக்கூடாது.
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் பத்து சதவீத மக்களுக்கு பொருளாதார அறிவு சுத்தமாக இல்லை . காமியோனிஸம் சோசியலிசம் செய்த அட்டூழியங்கள் என்ன என்று தெரியாது . பொருளாதார அறிவு அறவே கிடையாது . அன்பான சர்வாதிகாரி வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு அப்படி என்ன என்று கூட தெரியாது . பரமார்த்த குருவும் சீடர்களும் போன்று இந்த சீமானும் கோமாளிகளும்
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
07-மே-202120:06:17 IST Report Abuse
Vijay D Ratnam நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட ஒரே கட்சி. ஆனால் 233 தொகுதிகளில் டெபாசிட் இழந்து இருக்கிறது. ஒரேயொரு தொகுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டும் தோல்வியடைந்து தட்டுத்தடுமாறி மூன்றாவது இடத்தை பிடித்து டெபாசிட் இழக்காமல் தப்பித்து இருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X