எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., கோட்டையை பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி

Added : மே 07, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பா.ம.க., கோட்டையாக கருதப்படுகிற, திருப்போரூர் பொது தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகளில், அக்கட்சி போட்டியிட்டது. பொதுத்
PMK, VC, Viduthalai Chiruthaigal, Pattali Makkal Katchi

பா.ம.க., கோட்டையாக கருதப்படுகிற, திருப்போரூர் பொது தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அத்தொகுதியில் ஆய்வு நடத்த நிர்வாகிகளுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், நான்கு தனித் தொகுதிகள், இரண்டு பொது தொகுதிகளில், அக்கட்சி போட்டியிட்டது. பொதுத் தொகுதிகளான திருப்போரூரில், வி.சி., துணை பொதுச்செயலர் எஸ்.எஸ்.பாலாஜி, நாகப்பட்டினம் தொகுதியில், ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளனர்.

தனி தொகுதிகளான காட்டுமன்னார் கோவிலில், சிந்தனை செல்வன், செய்யூர் தொகுதியில், பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளனர். திருப்போரூர் தொகுதியில், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அத்தொகுதியில் அடங்கிய திருக்கழுக்குன்றத்தில் தான், முதல் முறையாக வன்னியர் சங்கம் துவக்கப்பட்டது.

பா.ம.க., துணை தலைவரும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆறுமுகம், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் வெற்றி பெறுவார் எனக்கருதி, பா.ம.க., தலைமை, 'சீட்' வழங்கியது. ஆனால், அவரை எதிர்த்த எஸ்.எஸ்.பாலாஜியும், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்றாலும், அனைத்து சமுதாயத்தினர் மற்றும் படித்த இளைஞர்களின் ஆதரவில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு பொதுத் தொகுதியில், அதுவும் பா.ம.க.,வை வெற்றி கொண்ட மகிழ்ச்சியில், திருமாவளவன் இருக்கிறார். பா.ம.க., கோட்டையான திருப்போரூர் தொகுதி கைவிட்டு போனதால், ராமதாஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Trichy,இந்தியா
11-மே-202102:45:38 IST Report Abuse
Raja ஆரம்பகாலத்தில் சரியான சமூக நீதிக்கு குரல் கொடுத்தவர் ஐயா ராமதாஸ், தற்போது சற்றே திசைமாறி சென்றுவிட்டார். மீண்டும் ஆடுகளத்துக்கு வரவேண்டும். பாரபட்சம் இல்லாத சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
newseithi - Chennai,இந்தியா
10-மே-202118:43:51 IST Report Abuse
newseithi விடுதலை சிறுத்தைகள் மீது அவதூறும் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கே ராமதாஸ் அவர்களுக்கு நேரம் போதவில்லை இதில் உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் அவர்களின் தேவைகளையும் ஆராய்ந்து அறிவதற்கு ஏது நேரம்.கடைசி நேரத்தில் புளித்து போன வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்று சாதிவெறியை தூண்ட நினைத்தார். உள்ஒதுக்கீடு அறிவிப்பும் உதயகுமார் மூலம் உடைப்பு எடுத்து விட்டது.ஆனால் முனைவர் திருமா முனைப்புடன் அணைத்து மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததால் தான் மக்கள் அங்கீகாரம் கொடுத்தார்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-மே-202120:13:46 IST Report Abuse
bal அதிமுகவுக்கு தோல்வி கிடைக்க செய்தது பாமாகா மநீம நாதகா தான்...அதோடு பிஜேபி தனித்து நின்றிருக்க வேண்டும்...அதுவு அதிமுகவுக்கு தோல்வி காரணம்...அதைவிட பிரசாந்த் கிஷோர் சொல்லிக்கொடுத்த பொய் அப்படியே படித்த ஸ்டாலின், மற்றும் குவாட்டர், பிரியாணி, துட்டு...
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
12-மே-202103:44:28 IST Report Abuse
Amal Anandanஇனி இப்படியே புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதான். வேற வழியேயில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X