அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று மறக்க முடியாத நாள்: ஸ்டாலின் பெருமிதம்

Updated : மே 07, 2021 | Added : மே 07, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: 'முதல்வர் பதவி ஏற்கும் இன்று (மே 7), என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தேர்தலில், தமிழக மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஐந்து முறை, தமிழகத்தை ஆண்ட கட்சி தி.மு.க., ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும், அரிய வாய்ப்பை, தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கின்றனர். தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்
CM Stalin, Stalin, MK Stalin, DMK, முதல்வர், ஸ்டாலின்

சென்னை: 'முதல்வர் பதவி ஏற்கும் இன்று (மே 7), என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தேர்தலில், தமிழக மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி உள்ளனர். ஐந்து முறை, தமிழகத்தை ஆண்ட கட்சி தி.மு.க., ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும், அரிய வாய்ப்பை, தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கின்றனர். தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை, மக்கள் வழங்கி உள்ளனர். அண்ணாதுரை, கருணாநிதி அலங்கரித்த நாற்காலியில், உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன்.


latest tamil news


வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும், சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு முன்னால், அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் பதவியேற்க முடியவில்லையே என்பது தான், என் கவலைக்கு காரணம். இந்த வெற்றிக்கு காரணமான, கதாநாயகர்களான தொண்டர்கள் முன், விழாவை நடத்தலாம் என, தேர்தலுக்கு முன் சிந்தித்து வைத்திருந்தேன். ஆனால், கொரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்த சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது.


latest tamil news


அதனால், கவர்னர் மாளிகையில், மிக எளிய முறையில், இன்று, 9:00 மணிக்கு, தொண்டர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி, தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறேன். வீட்டிலிருந்து, 'டிவி' நேரலையில் காணுங்கள். தொண்டர்கள் உழைப்பு, தி.மு.க., ஆட்சியை மலர வைத்தது. தொண்டர்கள் வாழ்த்து, எங்களை பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கி தருவோம். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
07-மே-202116:43:40 IST Report Abuse
அறவோன் தி.மு.க. வெற்றி புராணம்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
07-மே-202116:38:21 IST Report Abuse
அறவோன் ஓய்வறியா சூரியனின் மகன் பதவியேற்றார்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-மே-202116:36:04 IST Report Abuse
Pugazh V கலைஞரைப் போல் சாமர்த்தியமோ ராஜதந்திரமோ இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்தவுடன் ஆட்சியை கவிழ்த்து அரியணை ஏறியிருப்பார் என்று சொன்னார்கள், தான் ஒரு போதும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்திய பிறகும். கலைஞரை போல் திறமைசாலி இல்லை என்றார்கள், நான் கலைஞர் அல்ல, அவரிடம் இருந்து உழைப்பை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிலுரைத்தார் ஆளுமையற்றவர் என்றார்கள், தான் தலைமை ஏற்று நடத்திய இருதேர்தல்களிலும் கூட்டணியை கட்டமைத்ததிலும் பிரச்சார உத்தியிலும் மௌனமாக பதில் சொன்னார் அவரது நிர்வாக திறமையை கேள்விக்குறியாக்கினார்கள், தான் மேயராக இருந்து சென்னையின் கட்டமைப்பை மாற்றி ஏராளமான பாலங்கள் வருவதற்கு அடித்தளம் இட்டதையும், கழிவுகள் அகற்ற முன்மாதிரிகளை உருவாக்கி நிரூபித்தபின்பும் , அவர்களின் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தது அவர் முதல்வர் ஆவதற்கு 'கொடுப்பினை' இல்லை என்று, அதிர்ஷ்டத்தின் மீதும் மூடநம்பிக்கை மீதும் பழி போட்டார்கள், அவர் 'தெய்வத்தான் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்' என்று நம்பினார் இப்போதும் இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற பிறகும் , எதிர்பார்த்த வெற்றி அல்ல இது என்றும், அதிமுக வெற்றியுடன் ஒப்பிடும் பொது இது ஒன்றும் பெரியது இல்லை என்று இந்த வெற்றியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் ......, நம்மை அவ்வளவு எளிதில் வெற்றியடைய விடமாட்டார்கள் என்று அவர் சொன்னதுதான். கடந்த இருபது வருடங்களில் 15 வருடம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியின் மிகப் பெரிய பண பலத்துடனும், மத்தியில் ஆளும் பிஜேபி வெற்றிக்கு எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயங்காத கூட்டத்திற்க்கு இடையிலும், தமிழகத்திற்கு மாற்றம் கொண்டுவருவோம் என்று களமிறங்கிய கட்சிகள் எல்லாம் (நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்றம், மக்கள் நீதி, ராம்தாஸ் பாமக, பிரேமலதா தேமுதிக) யார் ஜெயித்தாலும் பரவாயில்லை 'திமுக' ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன் களமாடியதும், கலைஞருக்கும் திமுகவிற்கும் எதிராக அதிகார வர்க்கமும் ,ஆதிக்க சக்திகளும் தொடர்ந்து குறி வைக்கப்பட்ட ஊடக தாக்குதலையும் மீறி பெறப்பட்ட அவரின் இந்த வெற்றி சாதாரணமானது இல்லை . இதை அவர் உணர்ந்தே இருக்கிறார் தமிழக முதல்வராக பொறுபேற்க உள்ள மு.க.ஸ்டாலின், அனைத்து விமர்சனங்களையும் தனது பொறுமையினால் கடந்து வந்துள்ளார். வாழ்த்துக்கள் திரு ஸ்டாலின் அவர்களே ... நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கும் , இவர் வந்து என்ன செய்துவிடுவார் என்று ஏளனத்துடன் இருப்பவர்களுக்கும் சேர்ந்தே ஒரு நம்பிக்கையளிக்கும் ஆட்சி மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும்💐
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X